🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வளரும் நட்சத்திரம் - திரு.இராஜேஷ் குருசாமி

திரு.ராஜேஷ் குருசாமி அவர்கள் 02.03.1982-இல் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீ வில்லிப்புத்தூர் அருகேயுள்ள சீலநாயக்கன்பட்டி கிராமத்தில் திரு.A.குருசாமி நாயக்கர் – திருமதி.வளர்மதி தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். சட்ட கல்லூரியில் பயின்று வழக்கறிஞர் பட்டம் பெற்றார். இவருக்கு திருமணமாகி திருமதி.அனிதா என்ற மனைவியுள்ளார்.


இவரின் தந்தையார் திரு.குருசாமி அவர்கள் அசேபா பிளான் என்ற அமைப்பில் சீலநாயக்கன்பட்டி கிராமத்தில் கிராம சபை தலைவராக இருந்தார். அவர்கள் அரசியல்ஆர்வம் கரணமாக 2000-ஆம் ஆண்டு R.S.S அமைப்பில் இணைந்த திரு.இராஜேஷ் குருசாமி அவர்கள் பி.ஜே.பி.கட்சியிலும் உறுப்பினராக இணைந்து தீவிரமாக பணியாற்றினார். இதன்மூலம் 2000 முதல் 2002 வரை விருதுநகர் மாவட்டம், வத்ராப் ஒன்றிய யுவ மோர்ச்சாவின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் சிறப்பாக செயல்பட்டதால் 2002-இல் வத்ராப் ஒன்றிய யுவ மோர்ச்சா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003 முதல் 2005 வரை விருதுநகர் மாவட்ட யுவ மோர்ச்சா நிர்வாகக்குழு உறுப்பினராக பணியாற்றினார். 2012 முதல் 2016 வரை பி.ஜே.பி கட்சி தலைமையகமான கமலாலயத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கையின் தகவல் தொழில்நுட்ப மற்றும் கட்சி அமைப்பு சார்ந்த உதவிப்பணி மற்றும் பொறுப்பு வகித்தார். அதனைத் தொடர்ந்து 2014 முதல் 2017 வரை மாநில வர்த்தகப்பிரிவின் செயலாளராக பணியாற்றியுள்ளார். 2020-ல் விவசாய அணியின் மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளவர், M.S.M.E நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் குழுவில், மத்திய சென்னை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் விவசாய பணியின் மத்திய அரசு திட்டங்களுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக  பொறுப்போற்றுள்ளார். 


அரசியல் தவிர தொழில்துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வரும் திரு.ராஜேஷ் குருசாமி அவர்கள், Guru Intergrated Services India Pvt Ltd என்ற நிறுவன தலைவராக உள்ளவர் Landscapping & Gardening, Facility Management பணிகளை மேற்கொண்டு வருகிறார்.இந்நிறுவனம் இந்தியா அளவில் பல்வேறு மாநிலங்களில் கிளைகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர Nupuram lmpex India Pvt Ltd, Aargee Pest Management Pvt Ltd , Kreative Ads, Paisa Adviser.Com  என்ற பல்வேறு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார். இவரின் சகோதரர் திரு.ராமர் குருசாமி அவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தின் அரசு வழக்கறிஞராக (குற்றவியல்) ஆகபணியாற்றி வருகிறார். மற்றொரு சகோதரர் திரு. லக்ஷ்மன் குருசாமி அவர்கள் முன்னனி பத்திரிகை நிறுவனமான விகடன் குழுமத்தில்  இணை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். 

அரசியல்,தொழில் தவிர சமூக சேவையிலும் ஈடுபட்டு வரும் திரு. ராஜேஷ் குருசாமி அவர்களின் சமூக சேவையை பாராட்டி Diocese of Asia டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. Sage Education and Charitable trust என்ற லாபநோக்கமற்ற அறக்கட்டளையை 2013 ஆம் ஆண்டில் தோற்றுவித்து அதன் நிறுவன செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திரு.இராஜேஷ் குருசாமி அவர்கள், இந்நிறுவனத்தின் மூலம் விவசாயிகள் நலனை மேம்படுத்த மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களை கிராமப்புற சிறு-குறு விவசாயிகளிடம் கொண்டு சென்று அவர்கள் வாழ்வை மேம்படுத்தியுள்ளார்.மேலும் Annai Sudhesa Rural Development Trust என்ற அறக்கட்டளையை துவங்கி, விருதுநகர் மாவட்டத்தில் எரிசனத்தம் கிராமத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுயதொழில் மற்றும் விற்பனை பயிற்சி, கோவையில் ஏழை மாணவ-மாணவியருக்கு டியூசன் மற்றும் கணிணிப் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது.


வளரும் இளம் அரசியல் தலைவாராக சமுதாயத்தில் உருவாகிவரும் திரு.ராஜேஷ் குருசாமி அவர்கள் அரசியல், தொழில், சமூக ஆர்வலர் என்ற அளவில் மட்டுமல்லாமல், சென்னை South Asian Federation Games Village   Residents Welfare Association சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று  பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் (இங்கு IAS, IPS, மற்றும் MLA, MP, Ministers போன்றோர் வசிக்கும் குடியிருப்பு வளாகம் என்பது குறிப்பிடத்தக்கது) என்பதும், போட்டியிட்ட  முதல் தேர்தலில் வெற்றி பெற்று பதவியை கைப்பற்றினார் என்பது குறிப்பிடதக்கது . தவிர, கரையான் மற்றும் பூச்சி மருந்து உரிமையாளர் நலச்சங்கத்தில் நிர்வாக உறுப்பினர், தென்னிந்திய கட்டுமானர் சங்கத்தின் (Builder Association Of India) உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி வருகிறார். பல்துறைகளிலும் தடம்பதித்து அனைத்திலும் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் திரு.இராஜேஷ் குருசாமி அவர்கள் வரும் காலங்களில் மேலும் பல பதவிகளியயும், சிகரங்களையும் தொட்டு சார்ந்துள்ள கட்சிக்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved