🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனாரின் 53-ஆவது நினைவு நாள்

கவிராஜ பண்டிதர். திரு.ஜெகவீர பாண்டியனார்

இந்தியா−சீனா−பூடான் த்ரீ ஜங்ஷன் எல்லைப் பிரச்னையில் 1963-இல் சீனா வீரர்களை எதிர்கொண்டு தடுத்த நம் நாட்டு வீரா்களுக்கு 1965ல் செய்யுள் எழுதிய தீர்க்கதரிசி, பெரும்புலவர். கவிஞர்.ஜெகவீர பாண்டியனாரின் 53வது நினைவுதினம் இன்று...


57-ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் இந்திய- சீனா எல்லையில் நமது இராணுவ வீரா்கள் சீனவீரா்களை எதிர் கொண்டு தாக்கியுள்ளதை செய்தித்தாளில் படிக்கிறோம். கவிராஜ பண்டிதரின் 53-ஆவது நினைவு நாளான இன்று, நமது இராணுவ வீரர்களைப் பாராட்டி 1965-ல் "பாரத நாட்டு வீரா்கள்" என்ற தலைப்பில் கவிபாடியதை நினைவுபடுத்திக்கொள்வது, நமது வீரர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும்.

"வீரமே எங்களுக்கு வெற்றியை விரைந்து நல்கிக்

 கோரமே புரியும் தீய கொடியரைச் சிதைய நூறிச்

சீறுயர் தரும நீதி செறிந்தென்றும் சிதைந்து நிற்க்கும் 

பாரத வீரா் மேன்மை பார் எங்கும் பரவச் செய்க"....

என்று கவிவடித்த கவிராஜரின் 53-ஆவது நினைவு நாளில் பெருங்கவியை நினைவில் கொள்வோம்.

வாழ்க கவிராஜர் புகழ்.

தகவல் உதவி: திரு.மாப்பிள்ளைசாமி (எ) அய்யனார்,சிவகாசி.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved