🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைக்கக்கோரி விடுதலைக்களம் போஸ்டர் ஒட்டும் போராட்டம்

அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து , இந்திய விடுதலைப் போராட்டத்தில் முதல் குரல் கொடுத்து, துக்குமேடையேறி தன் இன்னுயிர் துறந்த, பாஞ்சாலங்குறிச்சி மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் சிலை அமைக்க கோரி விடுதலைக்களத்தின் மாநில, மாவட்ட ஆலோசனை கூட்டங்களிலும், மாநாடுகளிலும், தீர்மானங்கள் நிறைவேற்றி மனுக்கள் பலமுறை அரசுக்கு அனுப்பபட்டுள்ளது. மேலும் கோரிக்கை ஆர்பாட்டங்கள் மூலமும் , தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடத்தில் நேரிலும் வழியுறுத்தியுள்ளோம், கடந்த 2001 முதல் 2020 வரை பலமுறை கோரிக்கைகள் விடுத்தும் தமிழக அரசு வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைக்க முன்வரவில்லை. மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர்.ராஜீ அவர்கள் விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் வெண்கல சிலை அமைக்கபடுமென தெரிவித்தார். ஆனால் இதுவரை அரசாணை, இடம், திட்ட மதிப்பீடு, போன்ற பூர்வாங்க பணிகளில் கூட  தமிழக அரசு ஈடுபடவில்லை. எனவே விடுதலைகளம் சார்பில் மாவீரன் சிலை சென்னையில் அமைக்கும் வரை தொடர் போராட்டங்களை நடத்த உள்ளது, அதன் முதற்கட்டமாக 13-07-2020 அன்று தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டும் போராட்டத்தை நடத்த உள்ளது, இராசிபுரத்தில் நிறுவனத் தலைவர் கொ. நாகராஜன் அவர்கள் காலை 10 மணிக்கு  போஸ்டர் ஒட்டி போராட்டத்தை தொடங்கி வைக்கிறார், தமிழகம்  முழுவதும் போஸ்டர் ஒட்டும் போராட்டம் நடத்தும் விடுதலைக்களம் நிர்வாகிகள் சமுக ஊடகங்களில் புகைப்படங்களை பதிவிடுமாறும், விடுதலைக்களம் தலைமைக்கு 9487066643 என்ற வாட்சப் எண்ணிற்க்கும் அனுப்பி வைக்குமாறும் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்..


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved