Logo
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டிநாயக்கர் இராஜகம்பளம்
LIVE
• கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்! • கேஸ் சிலிண்டரின் உருளை வடிவமும், சிவப்பு நிறமும் ; அறிவியல் காரணம் என்ன? • இருநூறு ஆண்டுகளாக அமைதியின்றி தவிக்கும் பூலோக சொர்க்கம்! • ஒரே சமயத்தில் உறங்கவும், விழித்திருக்கவும் முடியும் உயிரினம்! • இரண்டே மணி நேர யுத்தத்தில் வீழ்ந்த பேரரசு - உலகப் போர்களின் அதிசயம். • முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் திரு.ஜோசப் விஜய் - இராஜகம்பளத்தாரின் வாழ்த்துகள்!
பாஜக ஒன்றியத் துணைத்தலைவராக சுரேஷ்குமார் நியமனம்!

பாஜக ஒன்றியத் துணைத்தலைவராக சுரேஷ்குமார் நியமனம்!

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் நடைபெற்று வரும் அமைப்பு ரீதியான புதிய நியமனங்களில் அடிப்படையில், கோவை மாவட்டத்தில் திரு.சுரேஷ்குமார் ஒன்றிய துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் விவரம் வருமாறு,

கோவை ஈச்சனாரில் வசித்து வருபவர் திரு.சுரேஷ்குமார். அந்தியூரைப் பூர்வீகமாகக் கொண்ட சுரேஷ்குமார், பாரதிய ஜனதா கட்சியின் கோவைத் தெற்கு மாவட்டம், சீரபாளையம் ஊராட்சி கிளைத் தலைவராக இருந்து வந்தார். பாஜக மாநிலத் தலைவராக திரு.நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்ட பின் பல்வேறு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதனடிப்படையில் தற்போது திரு.சுரேஷ்குமார் அக்கட்சியின் மதுக்கரை ஒன்றிய அரசு தொடர்பு பிரிவின் ஒன்றிய துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக கட்சி நிர்வாகிகள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


குறிச்சொற்கள்

செய்தி தமிழ்நாடு bjp thottianaicker www.thottianaicker.com

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண