அமைதி-விசுவாசத்தின் அடையாளம்! - இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
திராவிட இயக்க அரசியல் வரலாற்றில் நீண்ட நாள் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சி என்ற சிறப்புக்குறியது 1972-இல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் துவங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். 1977-இல் அரியணையில் ஏறிய அதிமுக 1987-இல் எம்.ஜி.ஆர் மறையும் வரை தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது.
பொன்விழா கொண்டாடி மகிழ்ந்து வரும் தொண்டர்களை வழிநடத்தும் தலைவனாய் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர் திரு.ஓ.பன்னீர்செல்வம். எளிய குடும்பத்தில் பிறந்து கடின உழைப்பாலும், விசுவாசத்தாலும் மூன்றுமுறை இடைக்கால முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் திரு.ஓ.பி.எஸ் அவர்கள்.
இன்று பிறந்தநாள் காணும் அமைதி,விசுவாசத்தின் அடையாளமாக விளங்கும் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவருமான மாண்புமிகு.ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு எளிய தொண்டனின் அன்புநிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.