🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நீண்ட கால ஏக்கத்தை நிறைவு செய்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!-70 வது அகவை தின வாழ்த்துகள்!

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தனது 70-வது பிறந்தநாளை நாளை கொண்டாடவுள்ளார். நாளை காலை 7 மணியளவில் அண்ணா நினைவிடம் செல்லும் முதல்வர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். இதனைத்தொடர்ந்து கலைஞர் நினைவிடத்திலும், அதன் பிறகு வேப்பேரியிலுள்ள தந்தை பெரியார் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அண்ணா அறிவாலயம் வரும் முதல்வர் பல்வேறு கட்சித்தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்கிறார்.

இறுதியாக மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ கல்லூரி வளாகத்தில் அகில இந்திய தலைவர்கள் பங்குபெறும்  பிறந்தநாள் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏற்புறையாற்றுகிறார். முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டு 22 மாத காலத்தில், கம்பளத்தாருக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியான மாவீரன் கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை என்பதை நிறைவேற்றியுள்ள தமிழக முதல்வர், தளி எத்திலப்ப நாயக்கருக்கு நினைவரங்கம் மற்றும் முழு உருவச்சிலை அமைத்துக்கொடுத்து சமுதாயத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும், நம்பிக்கையையும் ஈர்த்துள்ளார் என்றால் மிகையல்ல. 

கம்பளத்தாரின் நீண்ட கால ஏக்கத்தை நிறைவு செய்த தமிழிக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடு பல்லாண்டு வாழ்ந்து தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும், இந்திய துணைக்கண்டத்திற்கும் பணியாற்றிட வேண்டுமாய் இராஜகம்பள சமுதாய மக்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved