தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
கோவை மாவட்ட பாஜக-வை ஆக்கிரமிக்கும் கம்பளத்தார்!

கோவை மாவட்ட பாஜக-வை ஆக்கிரமிக்கும் கம்பளத்தார்!

Radheyan 26 Dec 2025 | 10:39 PM
பகிர்:

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் நடைபெற்று வரும் நியமனங்களில் அடிப்படையில் கோவை தெற்கு மாவட்ட பாஜக-வின் பல்வேறு பொறுப்புகளில் இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன் விவரம் வருமாறு, 



2026 சட்டமன்றத் தேர்தலை வலுவான கூட்டணி அமைத்து எதிர்கொள்வதற்காக மாநில பாஜக தலைவராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை மாற்றப்பட்டு நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து காலியாக உள்ள பதவிகளுக்கும், காலாவதியான பதவிகளுக்கும் புதிய நிர்வாகிகளை அக்கட்சி நியமித்து வருகிறது.


அதனடிப்படையில் கோவை தெற்கு மாவட்ட பாஜகவில் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகளாக இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கோவை தெற்கு மாவட்ட முன்னாள் கிளைத் தலைவராகவும், இளைஞரணி மண்டல் தலைவராகவும், சக்தி கேந்திரா பொறுப்பாளராகவும் பொறுப்பு வகித்துவந்த திரு.வெள்ளியங்கிரி தற்போது சுந்தராபுரம் மண்டல் அரசுத் தொடர்பு துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 



அதேபோல், சுந்தராபுரம் மண்டல் அமைப்புசாரா துணைத்தலைவராக ஈச்சனாரியைச் சேர்ந்த திரு. நாராயணசாமி, மண்டல் மகளிரணி துணைத்தலைவராக திருமதி.ஜெயந்தி பாபு, மகளிரணி மண்டல் செயற்குழு உறுப்பினர்களாக திருமதி. பத்மப்பிரியா வெள்ளியங்கிரி, திருமதி.உஷா சந்திரசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தவிர, கரூரைப்பூர்வீகமாகக் கொண்டு தற்போது ஈச்சனாரியில் வசித்துவரும் திரு.கண்ணன் (எ) ஞானமுத்து அவர்கள் இதுவரை வகித்து வந்த கிளைத்தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு மதுக்கரை ஒன்றிய வர்த்தக அணி துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்கும் இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் அனைவருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் செ.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு bjp thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண