🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஊராட்சிமன்றத் தலைவர்கள் ஒன்றிணைந்து மிரட்டிய வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்தநாள் விழா 03.01.2021 அன்று நாடெங்கும் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. திருப்பூர் அருகேயுள்ள ஊத்துக்குளி RS-ல் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.ப்ரியா சங்கர்சாமி தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் S.பெரியபாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் திரு.சின்னசாமி, பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் திரு.ரத்தினசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 


வழக்கத்திற்குமாறாக மாவீரனின் 262-வது பிறந்தநாள் இந்த ஆண்டு மிகுந்த உற்சாகத்துடன் நாடெங்கும் கொண்டாடப்பட்டதுபோல், ஊத்துக்குளியில் நடைபெற்ற விழாவிலும் ஆயிரக்கணக்கானோர் ஆர்வமுடன் திரண்டது பலரது புருவங்களை உயரச்செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. விழா முடிந்த மறுநாள் விழாச்செலவுகளை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட்ட விழாக்குழுவினரின் செயலை அனைவரும் பாராட்டினர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved