🔴 LIVE | முப்பெரும் விழா 2023


108 சாதிகளின் நலன்களை காவு வாங்க நினைக்கும் தமிழக அரசை பதவி நீக்கம் செய்க! - தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சங்கங்கள் ஆளுநரிடம் கோரிக்கை!

சட்டமன்றத்தேர்தலை மனதில்கொண்டு, மேற்கு மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழும் தான் சார்ந்த சமுதாய வாக்குகளையும், வடமாவட்டங்களில் பெரும்பான்மையாகவும், மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்கவகையிலுமுள்ள வன்னியர் சமுதாய வாக்குகளையும் பெற்றால், சட்டமன்றத்தேர்தலில் குறிப்பிடத்தக்க இடங்களை வென்று, கட்சியிலும், ஆட்சியையும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்று தமிழக முதல்வர் நினைப்பதாக அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். 

இக்கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில், ஏற்கனவே மத்திய அரசு தன் சொந்த நிதியை ஒதுக்கீடு செய்து, ஆங்கிலேயர்களை எதிர்த்ததால் சொல்லெனா துயரத்திற்கு உள்ளாகி, இந்த தேசத்திற்காக பலஉயிர்களை தியாகம் செய்த பூர்வ பழங்குடி (DNT) மக்களான தொட்டிய நாயக்கர், வேட்டுவகவுண்டர்,முக்குலத்தோர், முத்தரையர், போயர் உள்ளிட்ட தமிழகத்தில் MBC பட்டியலிலுள்ள 68 சாதிகளின் மக்கள்தொகை கணக்கெடுப்பை 2020-டிசம்பர்'31 க்குள் நடத்த உத்தரவிட்டும், இதேகோரிக்கையை வலியுறுத்தி 68 சமுதாய அமைப்புகள் சாகும்வரை உண்ணாவிரதம் போன்ற பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்திவரும் சூழலில், பேச்சுவார்த்தைக்கோ,கோரிக்கையை பரிசீலனை செய்யவோகூட எடப்பாடி தலைமையிலான தமிழக அரசுமுன்வரவில்லை. ஆனால் அதே MBC பட்டியலில் இடம்பெற்றுள்ள வன்னியர் சமுதாயத்திற்கு,  20% தனிஒதுக்கீடு கேட்டு, பாட்டாளி மக்கள் கட்சி போராட்டத்தை தொடங்கிய நாளன்றே, உடனடியாக அக்கட்சியின் தலைவர்களை முதல்வரே நேரில் அழைத்துப்பேசியதும், தொடர்ந்து மாநில அமைச்சர்கள் அக்கட்சியின் தலைவரின் இல்லத்திற்கே சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதையும், எடப்பாடியார் தலைமையிலான மாநில அரசு MBC பட்டியலிலுள்ள வன்னியர் அல்லாத 108 சமுதாயங்களைச் சேர்ந்த 3-கோடி மக்களை துச்சமாக மதிக்கிறது என்பதுடன் அரசியல் விமர்சகர்களின் கருத்துக்களுக்கும் வலுசேர்ப்பதாக அமைகிறது. 

இதனை உறுதி செய்யும் வகையில், பட்டாளி மக்கள் கட்சியை முதல்வர் அழைத்துப்பேசியவுடன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த புள்ளிவிபரங்களை சேகரிக்கும் ஆணையத்தை தமிழக முதல்வர் அறிவித்தார். முதல்வரின் இந்த முடிவு அனைத்து சமுதாய மக்களாலும், சமுதாய அமைப்புகளாலும் வரவேற்கப்பட்டது. (DNT மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டபொழுது, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தியே, இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிடம் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்.திரு.ராமதாஸ் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது). சமுதாய அமைப்புகளின் வரவேற்பானது, தமிழகத்தில் சகோதர மனப்பானமையுடன் வாழும் அனைத்து சமுதாய மக்களும், தங்கள் சமுதாய மக்கள்தொகைக்கு ஏற்ப உரிய இடங்கள் கிடைக்க வழிவகுக்கும் என்பதுடன், மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட சமுதாயங்களின் உரிமைகள், பெரும்பான்மை அடிப்படையில்  நசுக்கப்படாமல், அவரவருக்கு உண்மையான சமூகநீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தது.

ஆனால் அனைத்து சமுதாய மக்களின் மகிழ்ச்சியை குழிதோண்டி புதைக்கும் வகையிலும், வன்னிய சமுதாயத்தை பிற சமுதாயங்களுக்கு எதிராக கட்டமைத்து, பகைமை உணர்வை வளர்த்து அரசியல் ஆதாயம் தேடவேண்டும் என்ற அரசியல் சூழ்ச்சியின் காரணமாக, தமிழக அரசு சாதிவாரிக்கணக்கெடுப்பு நடத்த தான் அமைத்த ஆணையம் பணிகளை துவக்குவதற்கு முன்னரே, மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) பட்டியலில் இடம்பெற்றுள்ள 109 சாதிகளுக்குமான 20% இடஒதுக்கீட்டில், தமிழக அரசிடம் சாதிவாரி மக்கள்தொகை புள்ளி விபரங்கள் ஏதுவும் இல்லாதநிலையில், வன்னியர்களுக்கு மட்டும் 13% முதல் 15% இடஒதுக்கீட்டை வழங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான பணிகளை துவங்கியுள்ள மாநில அரசு, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைகளை பெறுவதற்காக நாளை 21.01.2021 வியாழக்கிழமை, ஆணையத்தின் கூட்டத்தை நடத்தவிருப்பதாக தெரிகிறது.

அரசியல் ஆதாயத்திற்காகவும், பதவி ஆசையிலும் 108-சாதிகளின் நலன்களை புறந்தள்ளிவிட்டு, தனி ஒருச்சாதிக்கு மட்டும் அவசர அவசரமாக இடஒதுக்கீடு வழங்குவது, அரசியல் சாசனம் அனைவருக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று வன்னியர் தவிர்த்த இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) சாதியினர் போர்க்குரல் எழுப்பியுள்ளனர்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 108 சமுதாய அமைப்புகள் மற்றும் சீர்மரபினர் நலசங்கம் (DNT), அரசியல் அமைப்பு சட்டப்படி செயல்படாத தமிழக அரசை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழக ஆளுநருக்கு அனுப்பியுள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

தமிழக அரசு அரசியல் அமைப்பு சட்டப்படி செயல்படவில்லை, எனவே உடனடியாக அரசை கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கவேண்டும் என்று ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளோம். ஏனென்றால், 18.8.2020 அன்று மத்திய அரசு DNT சமூக பொருளாதார குடும்ப கணக்கெடுப்பு நடத்த ஒரு தொடர்வு அதிகாரியை நியமிக்க உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அரசியல் காரணங்களுக்காகவும், பூர்வ தமிழ்குடிகளை வஞ்சிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடும், இதுவரை மத்திய அரசின் உத்தரவை மாநில அரசு மதிக்கவில்லை. எனவே அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 256,257, 365 மற்றும் 356 ன்படி மாநில அரசை உடனடியாக கலைக்கவேண்டும் என்றும். 103 வது அரசியல் அமைப்பு சட்டதிருத்தத்திற்கு பிறகு, சரத்து 338பி யின்படி பிற்படுத்தப்பட்ட நலன் சார்ந்த அத்தனை முடிவுகளும் ஒரே அமைப்பான NCBC-யே பரிசீலிக்கும், பரிந்துரைக்கும் என்றும், 342(அ)வின்படி பிற்படுத்தப்பட்டோரை நீக்குவது, சேர்ப்பது போன்ற அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு இல்லை. இருப்பினும் அதிகாரமற்ற தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க முயற்சிப்பதை எதிர்த்தும், கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைத்தும் முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது.

* முன்னேறிய வன்னியர் சாதியை MBCயிலிருந்து நீக்குவேண்டும்.

* முறையான கணக்கெடுப்பு நடத்தாமல் இடஒதுக்கீட்டில் மாற்றம் கூடாது.

* சட்டப்படி பின்தங்கிய, பிரதிநிதித்துவம் குறைவாக உள்ள வகுப்பிற்கு    மட்டுமே   இடஒதுக்கீடே வழங்க வேண்டும்.

* சாதிவாரி இடஒதுக்கீட்டை தடைசெய்ய வேண்டும்.

* சமூகநீதி புள்ளிவிபரங்களில் மோசடியில் ஈடுபட்டவர்களை தண்டிக்க  விசாரணை ஆணையம் வேண்டும், என்றும் கோரியுள்ளது.


மேலும்,சட்டவிரோதமாக வன்னியர் சாதிக்கு மட்டும் தனி இடஒதுக்கீடு வழங்க துடிக்கும் தமிழக அரசை கண்டித்தும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை கண்டித்தும் நாளை 21.1.21 காலை 11.00 மணிக்கு மைலாப்பூர் தமிழநாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முன்பாக MBC பிரிவில் உள்ள 40 MBC சமூகங்களின் மற்றும் 68 DNT சமூகங்களின் சார்பாக முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவிவித்துள்ளது. 

இப்படிக்கு

சீர்மரபினர் நலச்சங்கம் மற்றும் 108 சமூக அமைப்புக்கள்

20.01.2021

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved