🔴 LIVE | முப்பெரும் விழா 2023


துணைமுதல்வர் ஓபிஎஸ் இல்லத்தை முற்றுகையிட்ட DNT-சமுதாயத்தினர்!

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட DNT-பிரிவிலுள்ள 68 சாதிகளுக்கு ஒற்றைச்சான்றிதழ் வழங்கக்கோரி சீர்மரபினர் நலசங்கத்தினர் பலமாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை பல்வேறு காரணங்களைக் காட்டி தட்டிக்கழித்து வந்த தமிழக அரசு, DNT-தரப்பிலிருந்து சட்ட ஆலோசகர் மூலம் அரசு கூறிவந்த சாக்குபோக்குகளை உரிய விளக்கங்களுடன் சட்ட ரீதியாக நிராகரித்ததுடன், தேசிய சீர்மபரபின பழங்குடி ஆணையமும் பரிந்துரை செய்தபின்னும் செவிமடுக்காமல் இருந்து வருகிறது. இதனைக்கண்டிக்கும் விதமாகவும், உடனே ஒற்றைச் சான்றிதழ் வழங்க வலியுறுத்தியும் நேற்று (17.02.21) பெரியகுளத்தில் உள்ள துணைமுதல்வர் ஓபிஎஸ் அவர்களின் இல்லத்தை திரு.அய்யாக்கண்ணு தலைமையிலான சீர்மரபின நலச்சங்கத்தினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


நன்றி:

1.சன் நியூஸ்/சன் தொலைக்காட்சி

2.தந்தி டிவி

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved