தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம் - அரவக்குறிச்சி .திரு.K.தனக்கோடி

அரசியல் வானில் ஒளிரும் நட்சத்திரம் - அரவக்குறிச்சி .திரு.K.தனக்கோடி

Admin 27 May 2020 | 10:06 PM
பகிர்:

திரு.K.தனக்கோடி அவர்கள் 18.02.1972-ல் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள தடா கோவிலில் திரு.காளி நாயக்கர் – திருமதி.சின்னம்மாள் தம்பதியினருக்கு விவசாய குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். இவர் உயர்நிலைப்பள்ளிக் கல்வியுடன் படிப்பை நிறுத்திக்கொண்டவர், விவசாயப்பணியில் ஈடுப்பட்டார். இவருக்கு திருமணமாகி திருமதி.தமிழரசி தனக்கோடி  (இவரைப்பற்றி மேலும் விபரங்களுக்கு நீலநிற எழுத்தின் மீது விரல் வைக்கவும்) என்ற மனைவியும். D.ரேணுகா என்ற மகளும் உள்ளனர்.

postgallery(110)

இளம் வயதிலிருந்தே அதிமுக ஆதரவாளராக வளர்ந்த திரு.தனக்கோடி அவர்கள் 1990-ல், தனதி 18-ஆவது வயதில்  அஇஅதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்து தனது அரசியல் பயணத்தை துவங்கினார். அதிலிருந்து கட்சி நிகழ்சிகள், ஆர்ப்பாட்டம், மறியல், போராட்டம், பொதுக்கூட்டம், மாநாடுகள் அனைத்திலும் தொடர்ச்சியாக கலந்து சிறப்பாக பணியாற்றி வரும் திரு.தனக்கோடி அவர்கள்,  2007-ம் ஆண்டு புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சிக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டார். ஏழை-எளிய மக்கள் எளிதில் அணுகும் வகையில் எளிமையானவரான திரு.தனக்கோடி அவர்கள், அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் உரிய முறையில் தீர்வுகண்டிட தன்னாலான பணிகளை தொடர்ந்து செய்து வருபவர். கட்சி ஆட்சிக்கட்டிலில் இருந்து அறிவிக்கும் மக்கள் நலத்திட்டங்களை அடித்தட்டு மக்களுக்கு சென்றடையும் வகையில் பணியாற்றி வரும் திரு.தனக்கோடி அவர்கள், உள்ளூர் விசேசங்கள், நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், சுக-துக்கங்கள் அனைத்திலும் பங்கேற்று மக்களோடு ஐக்கியப்படுத்திக்கொண்டவர். விவசாயம் மற்றும் அரசியல் பணிகளுக்கிடையே தொழில் துறையிலும் கால்பதித்தவர் நிதிநிறுவனமும் நடத்தி வருகிறார்.

 சுமார் 20 ஆண்டுகள் அரசியல் பயணத்திற்குப்பின் 2011-ம் ஆண்டு  நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஊராட்சியில் காங்கிரீட் சாலைகள், தெரு விளக்குகள், சாக்கடை வசதி, முதியோர் உதவித்தொகை, அங்கன்வாடி கட்டிடம் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவர், குடிநீர் பஞ்சத்தைப்போக்கி மக்களி துயர் நீக்கினார். தனது சிறப்பான நிர்வாகத்திறமையால் மாவட்ட ஆட்சித் தலைவரின் “கிரீன் வில்லேஜ்” விருதை வென்று ஊராட்சிக்கு பெருமை சேர்த்தார் திரு.தனக்கோடி அவர்கள்.

postgallery(110)

சுமார் முப்பதாண்டு பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரரான திரு.தனக்கோடி அவர்கள்,கடந்த 2019- டிசம்பர் மாதம் நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் புங்கம்பாடி மேல்பாகம் ஊராட்சி மன்றத் தலைவர் வேட்பாளராக தன் துணைவியார் திருமதி.தமிழரசி தனக்கோடி அவர்களை களமிறக்கி வெற்றிவாகை சூடினார். இப்புதிய பொறுப்பின் மூலம் திரு.தனக்கோடி தம்பதியினர் சாதி,மதம்,இனம்,மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றி, சார்ந்துள்ள கட்சிக்கும்,சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டி வாழ்த்துகிறோம்.


குறிச்சொற்கள்

அரசியல் தலைவர்கள் தமிழ்நாடு Aravakkurichi.Mr.K.Thanakodi Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண