🔴 LIVE | முப்பெரும் விழா 2023


எங்களைப்பற்றி

தொட்டியநாயக்கர்-இராஜகம்பள சமுதாயம் கொல்லவார், சில்லவார், தோக்கலவார் என்ற மூன்று பிரதான பிரிவுகளை உள்ளடக்கியது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடர்த்தியாகவும், சில மாவட்டங்களில் பரவலாகவும் வசித்துவருகிறார்கள். தவிர, தகவல் தொழில்நுட்ப புரட்சிக்குப்பின் உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

ஆங்கிலேயர்கள் ஆட்சிவரை, தமிழகத்தில் மிகப்பெரும்பான்மையான பாளையங்களை ஆட்சி செய்து வந்தவர்கள் “தொட்டியநாயக்கர்” சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது வரலாறு உண்மை. நாடு சுதந்திரம் பெற்றபின் 1960-1970 களிலிருந்து “தொட்டியநாயக்கர்” சமுதாய மக்களின் வீழ்ச்சி தொடங்கியது. அதுவரை மிக அதிகமான நிலங்களை தங்கள் வசம் வைத்திருந்த சமுதாயத்தினர் விவசாயம் வீழ்ச்சியடையத் துவங்கியவுடன் அதற்கு மாற்றான வாய்ப்புகளை அடையாளம் கண்டு நிலைநிறுத்திக் கொள்ளத் தவறியதன் விளைவாக தொட்டியநாயக்கர் சமுதாயம் மற்ற முன்னேறிய சமுதாயங்களைக் காட்டிலும் பல்வேறு துறைகளில் வளர்ச்சி, சுமார் முப்பது ஆண்டுகள் பின்தங்கியுள்ளதை அனுபவரீதியாக உணரமுடிகிறது.

இளம்தலைமுறையினர் சொற்ப அளவில் மட்டுமே கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் பெற்று தங்களை உயர்த்திக்கொண்டாலும், விவசாயம், அரசியல், தொழில்துறைகளில் போதுமான வளர்ச்சியை எட்டமுடியவில்லை. மேலும், முன்னேறியவர்களுக்கும், சமுதாயத்திற்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் சமீபகாலங்களில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் இன்று தங்களை முன்னேறியவர்களாக நம்புவர்களும்கூட கல்வி, பொருளாதார, சமூக அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்வது பெரும் சவாலாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

சமுதாயத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்களின் வளர்ச்சியும் சமுதாயத்துடன் ஒருங்கிணைந்து செல்வதே சமுதாயம் நீண்டகாலம் ஆரோக்கிய சமநிலையுடன் வாழ்வதற்கு வழிவகுக்கும். தங்களை சுற்றிய ஆரோக்கிய சமுதாயம் இருப்பதே இளைஞர்கள் துணிச்சலுடன் புதிய முயற்சிகளில் இறங்குவதற்கு உறுதுணையாக இருக்கும். இன்றைய சமச்சீரற்ற நிலையில், பல்வேறுதுறைகளில் புதியமுயற்சியில் இறங்குபவர்கள் சிறு சறுக்கள்களை சந்திக்கும் பொழுது, ஒட்டுமொத்த குடும்பமும் தலைமுறை தலைமுறைக்கு மீண்டு வரமுடியாத சூழ்நிலைக்கு சென்றது வரலாறு நமக்கும் சொல்லும் உண்மை.

ஒட்டுமொத்த சமுதாயமும் ஒருங்கிணைந்து வளர்ச்சியடைய அனைவரையும் ஒற்றைப்புள்ளியில் இணைக்கவேண்டியது அவசியமாகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை சமுதாயத்துடன் இணைப்பது, தீர்வுக்கான முதல்படியாக இருக்கும் என தீர்க்கமாக நம்புகிறோம். இதன்மூலம் மக்கள்தொகை பற்றிய தகவல்கள், கல்வி, வேலைவாய்ப்புகள் பற்றிய நிலவரம், அரசியல், தொழில்துறையில் கோலோச்சுபவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு துறைசார்ந்த பட்டதாரிகள் பற்றிய புள்ளி விபரங்களை துள்ளியமாக சேகரிப்பதன் மூலம் சமுதாயத்தின் தேவை என்ன என்பதை அறிந்து, சமுதாயம் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு பயணிப்பதற்கு ஏதுவாக இருக்கும். மேலும், இளைய தலைமுறையினர், திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கிணங்க வாழாமல், கிடைக்கப் பெறும் வாய்ப்புகளை பயன்படுத்துவதில் மெத்தனம் காட்டும் போக்கும், உள்ளூரிலேயே வாழவேண்டும் என்ற மனநிலையை மாற்றி, உலகில் எந்தமூலையில் வசிக்கும் சமுதாய உறவுகளும், சமுதாயத்தில் நிகழும் நிகழ்வுகளை, உடனுக்குடன் அறிந்து கொள்வதன் மூலம். சொந்த மண்ணில் இருக்கும் உணர்வை வழங்கிடும் "Community Social Media" வாக நமது இந்த வலைதளம் உதவிகரமாக இருக்கும்.

மேலும், இனத்தின் பண்பாடு, கலை, கலாச்சாரம் மற்றும் பாளையக்கார்கள், ஜமீன்தார்கள் பற்றிய வரலாற்று விபரங்கள், சமுதாயத்திற்க்காக உழைத்த தியாகிகள் பற்றிய விபரங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பதன் மூலம் இனத்தின் வரலாற்றுப் பெறுமைகளை காலம் கடந்து அடுத்தடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதும் இந்த வலைதளத்தின் நோக்கமாகும்.

இந்த இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும், கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பதிவிடப்பட்டுள்ளது. கூடுதல் செய்திகள், வரலாற்று தகவல்கள், திருத்தங்கள் தேவைப்படும் பட்சத்தில் உங்கள் மேலானா ஆலோசனை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved