தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
தமிழ்திரு நாட்டின் திசைகாட்டியே! நின் புகழ் ஓங்குக!- வை.மலைராஜன்.

தமிழ்திரு நாட்டின் திசைகாட்டியே! நின் புகழ் ஓங்குக!- வை.மலைராஜன்.

Radheyan 03 Jun 2022 | 12:49 PM
பகிர்:

தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-வது பிறந்த நாளில், அவரது புகழ் திக்கெட்டும் பரவட்டும்!

முத்தமிழறிஞர் கலைஞர், தமிழர்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவர். கலை, இலக்கியம், அரசியல், ஆட்சி நிர்வாகம் என அனைத்துத் துறைகளிலும் தனி முத்திரை பதித்தவர். அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்நாட்டு அரசியலின் மையமாகத் திகழ்ந்தவர்.

சுமார் 80 ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர். ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றியவர். 1957 முதல் 2016 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, 13 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்தவர். அனல் பறக்கும் வசனங்களால் திரையுலகில் தனித்துவம் பெற்றவர். இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் தனி முத்திரை பதித்தவர்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் இயக்கத்திற்கு ஏறத்தாழ 50 ஆண்டுகள் அசைக்க முடியாத தலைவராகப் பணியாற்றியவர். அரசியலிலும் ஆட்சி நிர்வாகத்திலும் தன்னிகரற்ற பெருந்தலைவராக வலம் வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

இந்தியத் திருநாட்டிற்கே வழிகாட்டும் வகையில் பல்வேறு முன்னோடித் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தியவர். பேருந்துகள் நாட்டுடைமையாக்கம், குடிசை மாற்று வாரியம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், மாநிலத் திட்டக் குழு உருவாக்கம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீடு, மகளிருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு, உழவர் சந்தைகள், வருமுன் காப்போம் திட்டம், திருமண உதவித் திட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், கருவுற்ற தாய்மார்களுக்கு ரூ.6,000 நிதியுதவி, பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை, சத்துணவில் முட்டை, இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கும் திட்டம் என எண்ணற்ற திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தியவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்.

பொதுவாழ்வில் பெரியாரும் அண்ணாவும் வளர்த்தெடுத்த சமூகநீதி உணர்வைப் போற்றி, அண்ணா வழியில் அயராது உழைத்து அவர் ஆற்றிய தொண்டுகள் ஏராளம்.

வாழும்போதே வரலாறாகத் திகழ்ந்து, மறைந்த பின்னரும் தமிழ் மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் புகழ், இவ்வையகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.

கலைஞரின் புகழ் திக்கெட்டும் பரவட்டும்! புகழ் ஓங்கட்டும்!

குறிச்சொற்கள்

கட்டுரைகள் தமிழ்நாடு Vai.Malairajab thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண