தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
DNT-இட ஒதுக்கீடு இழைக்கப்பட்ட அநீதி -பகுதி-5

DNT-இட ஒதுக்கீடு இழைக்கப்பட்ட அநீதி -பகுதி-5

Radheyan 28 Apr 2021 | 04:20 PM
பகிர்:

ஒரு உறையில்  இரண்டு கத்தி இருக்க முடியாது.

மேற்படி 102வது திருத்தப்படி சரத்து 338Bன்படி (உட்பிரிவு 7) தமிழக பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாடு சம்பந்தமாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் மட்டுமே பரிந்துரை செய்ய முடியும். எனவே தமிழக அரசு தமிழக ஆணையத்தின் தலைவரின் பரிந்துரையின் அடிப்படையில் சட்டம் 8/2021 கொண்டுவரப்பட்டுள்ளது என்பது அதிகாரமற்ற செயல்.

1994ல் அரசியல் அமைப்பு சட்ட திருத்தம் 76ன் மூலம் தமிழக இடஒதுக்கீடு சட்டம் 45/1994 இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 9வது அட்டவணையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் பிரிவு 4, 5ன்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு(MBC) 20% இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. அச்சட்டத்தை திருத்தாமல் MBC இடஒதுக்கீட்டை 10.5%, 7%, 2.5% என்று கூறுபோட சட்டத்தில் வாய்ப்பே இல்லை. சட்டம் 45/1994தான் செல்லும், சட்டம் 8/2021 செல்லாது. சட்டம் 45/1994யை திருத்தினால் மட்டுமே உள் ஒதுக்கீடு வழங்க முடியும். (குறிப்பு தமிழக அரசு இப்போதுதான் இப்படி செய்கின்றது என்று நினைக்கவேண்டாம் 2007ல் 30% BC இடஒதுக்கீட்டிலும், 2009ல் 18% SC இடஒதுக்கீட்டிலும் இதுபோன்று சட்டவிரோதம் அரங்கேற்றப்பட்டுள்ளது. மக்களும் நீதிமன்றங்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர்).

அரசியல் அமைப்பு சட்டம் சரத்து 16(4)ன்படி வகுப்பு வாரி இடஒதுக்கீடு மட்டுமே சாத்தியம். சாதிவாரி இடஒதுக்கீடு செல்லாது. 1921 முதல் தமிழகத்தில் இருந்த சாதிவாரி இடஒதுக்கீட்டை 1951ல் செம்பகம் துரைராஜன் வழக்கில் செல்லாது என்று உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் கூறி 70 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாதிவாரி இடஒதுக்கீடு கொண்டுவருவது சட்டப்படி செல்லாது. நாட்டை நாசமாக்கும் செயல்.

பதிவு தொடரும்.

தொட்டியநாயக்கர் உள்ளிட்ட சீர்மரபினர் நலச்சங்கம் மற்றும் 115 சமுதாய அமைப்புகள்.

குறிச்சொற்கள்

கட்டுரைகள் தமிழ்நாடு Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண