தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
சிலம்பாட்டம் போட்டி- தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்தார் சர்வின்!

சிலம்பாட்டம் போட்டி- தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்தார் சர்வின்!

Radheyan 09 Jun 2022 | 01:03 AM
பகிர்:

சிலம்பாட்டம் போட்டி- தேசிய அளவில் இரண்டாம் இடம் பிடித்தார் சர்வின்!

ஹரியான மாநிலம் சோனிபட்டில் யூத் பெடரேசன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான சிலம்பாட்டம் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்திலிருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 161 பேர் பல்வேறு பிரிவுகளில் கலந்துகொண்டனர். இதில் 69 தங்கம், 39 வெள்ளி, 44 வெண்கலம் வென்று தமிழ்நாடு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.


8-வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் கலந்துகொண்ட சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளரும், கோவை, மதுக்கரை ஒன்றிய அம்மா பேரவையின் தலைவருமான சிவசாமி அவர்களின் பெயரனும், பிரபாகரன்-கௌரி தம்பதியினரின் மகனுமான "சர்வின்" தேசிய அளவில் இரண்டாவது இடம்பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். சென்னை, அரும்பாக்கத்திலுள்ள கோலப்பெருமாள் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வரும் "சர்வின்" ஏற்கனவே வண்டலூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியிலும், ஆவடியில் நடைபெற்ற வட்டார அளவிலான போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தேசிய அளவிலான போட்டியில் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்று இன்று சென்னை திரும்பிய சர்வினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்வினுக்கு சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


குறிச்சொற்கள்

சாதனையாளர்கள் தமிழ்நாடு Sarvin thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண