தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • கம்பளத்தாரின் கைமணம்... தேனியின் பெருமை! • 35 ஆண்டுகால சமூகப் பணிக்கு மகுடம்; புதுச்சத்திரம் அரிமா சங்கத்தின் 5-வது தலைவராக பொறுப்பேற்கிறார் தொழிலதிபர் ஆர். முத்துச்சாமி • இராஜகம்பளத்தாரின் ஐஐடி வெற்றிப் பயணத்தில் மகுடம் சூட்டிய கவின் பிரசாந்த்!
விளம்பரங்கள்
ஐஐடியில் தொடரும் கம்பளத்தார் இளைஞர்களின் சாதனைப் பயணம்!

ஐஐடியில் தொடரும் கம்பளத்தார் இளைஞர்களின் சாதனைப் பயணம்!

Radheyan 22 Aug 2023 | 04:55 PM
பகிர்:

உலகின் புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (IITs), இந்தியாவின் அறிவியல், தொழில்நுட்ப மற்றும் பொறியியல் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கி வருகின்றன. சுதந்திர இந்தியா உருவான பின்னர், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு உலகத் தரம் வாய்ந்த பொறியாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கும் நோக்கில், பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசும், முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களும் முன்னெடுத்த முயற்சியால் ஐஐடி கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.

ஐஐடிகளில் சேர்வது இன்று இந்தியா முழுவதும் உள்ள மாணவ, மாணவியரின் மிகப்பெரிய கல்விக் கனவாக உள்ளது. அதற்கான JEE (Joint Entrance Examination) தேர்வில் வெற்றி பெறுவது கடுமையான போட்டியைக் கொண்டது. ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினாலும், மிகச் சிலருக்கே ஐஐடிகளில் சேரும் வாய்ப்பு கிடைக்கிறது.

இந்தச் சூழலில், வரலாற்றுச் சிறப்புமிக்க கம்பளத்தார் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐஐடிகளில் சேர்வது நீண்டகாலமாக மிகவும் அரிதான நிகழ்வாக இருந்து வந்துள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 40 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டதாகக் கூறப்படும் இச்சமூகத்திலிருந்து, கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே தொடர்ந்து மாணவர்கள் ஐஐடிகளில் சேரத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.

இந்த மாற்றத்தின் தொடக்கமாக, 2021 ஆம் ஆண்டு, தேனி மாவட்டம் வேலாயுதபுரம் (A. வாடிப்பட்டி) பகுதியைச் சேர்ந்த பொறியாளர் திரு. நாகராஜன் – திருமதி. ராஜேஸ்வரி தம்பதியரின் மகன் என். ஹரிஹரசுதன், டெல்லி ஐஐடியில் Engineering & Computational Mechanics பிரிவில் சேர்ந்து தற்போது தனது படிப்பைத் தொடர்ந்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு, ஈரோடு மாவட்டம் மில்மேடு – காளிகுளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தம்பதியரான திரு. ஆர். ரவி – திருமதி. ஆர். ராஜேஸ்வரி அவர்களின் மகன் ஆர். கவின் பிரசாந்த், JEE தேர்வில் வெற்றி பெற்று சென்னை ஐஐடியில் இயந்திரவியல் (Mechanical Engineering) துறையில் இணைந்து கல்வி பயின்று வருகிறார்.

இப்போது, அந்த வரிசையில் மேலும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற JEE தேர்வில் 98.9814 சதவீத மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில் 2731-வது இடத்தைப் பெற்ற ஜெ. சச்சின், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஐஐடியில் Bachelor of Engineering Science படிப்பில் சேர்ந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள அனுப்பங்குளம் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட திரு. பி. ஜெயக்குமார் – திருமதி. சூசன் தம்பதியரின் மகனான சச்சின், தற்போது பெற்றோருடன் மதுரையில் வசித்து வருகிறார். இவருக்கு ஜெ. ஸ்டெபி என்ற தங்கை உள்ளார்.

சச்சின் தனது ஆரம்பப் பள்ளிக் கல்வியை மதுரை குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளியிலும், மேல்நிலைப் பள்ளிக் கல்வியை சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியிலும் பயின்றுள்ளார்.

பட்டயப் பொறியாளரான அவரது தந்தை திரு. பி. ஜெயக்குமார், EASYTECH என்ற நிறுவனத்தின் மூலம் CCTV கேமராக்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்து வருவதோடு, மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பல நகரங்களில் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகளை நிறுவும் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஹரிஹரசுதன், கவின் பிரசாந்த் ஆகியோரின் சாதனைப் பாதையைத் தொடர்ந்து, ஜெ. சச்சினும் ஐஐடியில் இணைந்திருப்பது கம்பளத்தார் சமூக மாணவர்களுக்கு புதிய நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தும் நிகழ்வாகும். ஐஐடியில் சேர்வது சிலருக்கே சாத்தியமான கனவாக இருந்த நிலை மாறி, இனி ஆண்டுதோறும் அதிகமான மாணவர்கள் இந்த உயர்கல்விப் பயணத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்திற்கு சச்சினின் சாதனை ஒரு ஊக்கமாக அமையும்.

ஜெ. சச்சின் தனது கல்விப் பயணத்தில் மேலும் பல உயரங்களை எட்டிட, கம்பளத்தார் சமூகத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

சாதனையாளர்கள் தமிழ்நாடு sachin thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண