🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மு.அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் திரண்ட திருமணவிழா!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கோ.கலையரசன் இல்லத் திருமண் வரவேற்புவிழா-வில் முன்னாள் அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதன் விபரம் வருமாறு,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள தடாகோவிலைச் சேர்ந்தவர் கோ.கலையர்சன். அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மகன் க.அகல்யன் - பி.ப்ரியதர்ஷினி ஆகியோர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (01.06.2025) ஞாயிற்றுக்கிழமை மதியம் அரவக்குறிச்சி - பள்ளபட்டி சாலையில் அமைந்துள்ள என்.எஸ் திருமண மஹாலில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இத்திருமண விழாவில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடியார் கலந்துகொள்வதாக இருந்தநிலையில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு குறித்த ஆலோசனை காரணமாக கலந்துகொள்ள முடியாத சூழலில், மணமக்களுக்கு வாழ்த்துச்செய்தி அனுப்பியிருந்தார். எனினும் அவர் சார்பாக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், உயர் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பழகன், மு.ஊ.ம.தலைவர்கள் சின்னச்சாமி, அருப்புக்கோட்டை ஏ.காசிராஜன், மு.ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், சின்னுச்சாமி, செல்வி சின்னுச்சாமி, சத்தி என்.பவுல்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். தவிர, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள், இந்நாள்  சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

அதேபோல், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் மல்லை சி.சத்யா, பொருளாளர் செந்திலதிபன் உள்ளிட்ட முன்னனித் தலைவர்கள், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழக பொதுச்செயலாளர் கே.இராமகிருஷ்ணன், தாதா நாயக்கர், தேனி இரமேஷ்பாபு, சத்தியமூர்த்தி, நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, மூத்த வழக்கறிஞர் பழனிச்சாமி, அமைப்புச் செயலாளர் எம்.சரவணன், நாகப்பன், மனோகர், சின்னராஜ், சின்னச்சாமி, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.இராமராஜு, துணைத் தலைவர் ஆர்.பெருமாள், ஒருங்கிணைப்பாளர் டி.சுப்பிரமணியன், வர்த்தக அணித் தலைவர் எஸ்.சுரேஷ்குமார், வழக்கறிஞர் பார்த்தசாரதி, ஆறுமுகச்சாமி, மாப்பிள்ளை துரை, கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், மாவட்டத் தலைவர் குணசேகர், எஸ்.முத்துச்சாமி, சுரேஷ்குமார், குணசேகரன் மகளிரணி அமைப்பாளர் பாக்கியலட்சுமி,  வழக்கறிஞர்கள் ரங்கநாதன், சந்திரசேகரன், தொழிலதிபர்கள் வேலுச்சாமி, அன்பரசு, ரேவதி காந்தி செந்தில்ராஜா உள்ளிட்ட பலர் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved