தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஆலோசகர் T. நாராயணன் இல்லத் திருமண விழா! - மணமக்களுக்கு நேரில் வாழ்த்து. • பொள்ளாச்சி பகவதி கேட்டரிங் இல்லத் திருமண விழா! – சமுதாயத் தலைவர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து! • சாபத்தால் தந்தையாக முடியாத பாண்டு – பாண்டவர்கள் பிறந்த அதிசயம்! • விருப்பாச்சியின் வீர முழக்கம்! ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை நடுங்க வைத்த இராஜகம்பளத்து மாவீரன் கோபால் நாயக்கர்! • ஸ்ரீதேவா அரிசி மண்டி உரிமையாளர் இல்ல மணவிழா! மணமக்களுக்கு சமுதாய நலச்சங்கம் வாழ்த்து! • இராஜகம்பள சமுதாய நலச்சங்க ஆலோசகர் T. நாராயணன் இல்லத் திருமண விழா! - மணமக்களுக்கு நேரில் வாழ்த்து. • பொள்ளாச்சி பகவதி கேட்டரிங் இல்லத் திருமண விழா! – சமுதாயத் தலைவர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து! • சாபத்தால் தந்தையாக முடியாத பாண்டு – பாண்டவர்கள் பிறந்த அதிசயம்! • விருப்பாச்சியின் வீர முழக்கம்! ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை நடுங்க வைத்த இராஜகம்பளத்து மாவீரன் கோபால் நாயக்கர்! • ஸ்ரீதேவா அரிசி மண்டி உரிமையாளர் இல்ல மணவிழா! மணமக்களுக்கு சமுதாய நலச்சங்கம் வாழ்த்து!
விளம்பரங்கள்
பொள்ளாச்சி பகவதி கேட்டரிங் இல்லத் திருமண விழா! – சமுதாயத் தலைவர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து!

பொள்ளாச்சி பகவதி கேட்டரிங் இல்லத் திருமண விழா! – சமுதாயத் தலைவர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து!

Admin 22 Nov 2026 | 05:58 PM
பகிர்:

பொள்ளாச்சி பகவதி கேட்டரிங் இல்லத் திருமண விழா! – சமுதாயத் தலைவர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து!

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிரபலமாக விளங்கும் பொள்ளாச்சி பகவதி கேட்டரிங் நிறுவனத்தின் உரிமையாளரும், சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளருமான திருமதி சரஸ்வதி இராதாகிருஷ்ணன் இல்லத் திருமண வரவேற்பு விழா நேற்று (21.11.2026) மாலை பொள்ளாச்சியில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சமுதாயத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் புகழ்பெற்ற பொள்ளாச்சி பகவதி கேட்டரிங் நிறுவனத்தை நடத்தி வருபவர் பொள்ளாச்சி புளியம்பட்டியைச் சேர்ந்த திருமதி சரஸ்வதி இராதாகிருஷ்ணன். இவரது அன்பு மகன் R. குருபிரசாத், M.B.A., அவர்களுக்கும், கோவை மாவட்டம் குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த தெய்வத்திரு N. இராஜேந்திரன் – திருமதி R. பரிமளா ஆகியோரின் அன்பு மகள் R. சங்கீதா (எ) தனலட்சுமி, B.Sc., அவர்களுக்கும் திருமணம் நடைபெற்றது.

இதனையொட்டி, மணமக்களின் திருமண வரவேற்பு விழா பொள்ளாச்சி – உடுமலை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகத் தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் துணைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார். மேலும், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், திமுக பிரமுகர்களான ஈச்சனாரி கோ. மகாலிங்கம், பொ. காமராஜ், க. மாசிலாமணி, காளிமுத்து உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், கோவை மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் பாக்கியலட்சுமி, குள்ளக்காபாளையம் முத்துராஜ், குளத்துப்பாளையம் சௌந்திரராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகளும் விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

உறவினர்கள், நண்பர்கள், சமுதாயப் பெரியோர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கியப் பிரமுகர்களின் வருகையால் விழா சிறப்புற்றது. புதுவாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள மணமக்கள் குருபிரசாத் – சங்கீதா தம்பதியினர் எல்லா வளமும், நலமும் பெற்று, அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த இல்லற வாழ்வை வாழ வாழ்த்துவோம்!

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு சமுதாய நிகழ்வுகள் திருமண வரவேற்பு பொள்ளாச்சி பகவதி கேட்டரிங் சரஸ்வதி இராதாகிருஷ்ணன் இராஜகம்பள சமுதாயம் வாழ்த்துகள்
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண