தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி முதல்வர் இல்லத் திருமண விழா • ஏதென்ஸின் ஜனநாயகமும் அடிமைகளின் வாழ்க்கையும் • 22 ஆண்டுகால அநீதிக்கு முற்றுப்புள்ளி! ஓபிசி கிரீமிலேயர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு! • பஞ்சமும் பக்கிங்ஹாம் கால்வாயும் – பசியின் கொடுமையில் உருவான நீர்வழிப் பாதை! • DNT ஒற்றைச் சாதிச்சான்றிதழ் கோரிக்கை: தமிழக அமைச்சருடன் சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் முக்கியப் பேச்சுவார்த்தை! • பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி முதல்வர் இல்லத் திருமண விழா • ஏதென்ஸின் ஜனநாயகமும் அடிமைகளின் வாழ்க்கையும் • 22 ஆண்டுகால அநீதிக்கு முற்றுப்புள்ளி! ஓபிசி கிரீமிலேயர் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு! • பஞ்சமும் பக்கிங்ஹாம் கால்வாயும் – பசியின் கொடுமையில் உருவான நீர்வழிப் பாதை! • DNT ஒற்றைச் சாதிச்சான்றிதழ் கோரிக்கை: தமிழக அமைச்சருடன் சீர்மரபினர் நலச்சங்க நிர்வாகிகள் முக்கியப் பேச்சுவார்த்தை!
விளம்பரங்கள்
பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி முதல்வர் இல்லத் திருமண விழா

பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி முதல்வர் இல்லத் திருமண விழா

Admin 13 Nov 2026 | 12:06 PM
பகிர்:

பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி முதல்வர் இல்லத் திருமண விழா

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி முதல்வர் இல்லத் திருமண வரவேற்பு விழா நேற்று (12.11.2026) மாலை விமரிசையாக நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி முதல்வரும், சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நன்கொடையாளருமான முனைவர் செ. பழனிச்சாமி - தெய்வத்திரு தே. ரதிமாலா ஆகியோரின் மகன் ப. பிரதீப் B.E., மற்றும் கடலூர் கலை பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் பொ. தண்டபாணி - த. கலைவாணி ஆகியோரது மகள் த. சந்தியா B.E., M.B.A., ஆகியோரது திருமணம் இன்று (13.11.2026) காலை நடைபெற்றது. இதனையொட்டி, சத்தியமங்கலம் கொங்கு திருமண மண்டபத்தில் நேற்று மாலை திருமண வரவேற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இவ்விழாவில் பண்ணாரி அம்மன் குழுமத் தலைவர் (சேர்மன்) தொழிலதிபர் எஸ். வி. பாலசுப்பிரமணியம், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, சத்தியமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல். பி. தர்மலிங்கம், பவானிசாகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அ. பண்ணாரி, சத்தியமங்கலம் நகரமன்றத் தலைவர் ஜானகி ராமசாமி, உள்ளாட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் நேரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கப் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என். பவுல்ராஜ், மண்டலப் பொறுப்பாளர் டி. பிரபாகரன், கௌரி மற்றும் ஈரோடு மாவட்ட நன்கொடையாளர்களான ஊட்டி சரண் பள்ளித் தாளாளர் கே. என். ஆர். ரங்கராஜ், நம்பிராஜ், ஆர். முருகேஷ், பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.இவர்களுடன் கோவை மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் பாக்கியலட்சுமி, சங்கத்தின் கோவை மாவட்ட நன்கொடையாளர்கள் அதிமுக ஒன்றியச் செயலாளர் டி. சிவசாமி, நஞ்சுண்டகுமார், நாகராஜ், கணேசன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் மாசிலாமணி, தேவராஜ், மாரிமுத்து, முத்துக்குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லூரி செ. பழனிச்சாமி பிரதீப் – சந்தியா திருமண வரவேற்பு சத்தியமங்கலம் இராஜகம்பள சமுதாயம் சமுதாய நிகழ்வுகள்
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண