தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல மணவிழாவில் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் வாழ்த்து • கம்பளத்து மாவீரர்கள் தோளோடு தோள்நின்று விடுதலை நெருப்பை மூட்டிய மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்! • பீஷ்மரின் உறுதிமொழி: வாக்கைக் காப்பதா, அறத்தைக் காப்பதா? • ஒரு தலைவரின் வரலாறும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தோற்றமும் • ஆன்மநேய சேவை விருது பெற்ற சி. முத்துசாமி தம்பதியருக்கு வாழ்த்து! • கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல மணவிழாவில் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் வாழ்த்து • கம்பளத்து மாவீரர்கள் தோளோடு தோள்நின்று விடுதலை நெருப்பை மூட்டிய மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்! • பீஷ்மரின் உறுதிமொழி: வாக்கைக் காப்பதா, அறத்தைக் காப்பதா? • ஒரு தலைவரின் வரலாறும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தோற்றமும் • ஆன்மநேய சேவை விருது பெற்ற சி. முத்துசாமி தம்பதியருக்கு வாழ்த்து!
விளம்பரங்கள்
கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல மணவிழாவில் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் வாழ்த்து

கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல மணவிழாவில் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் வாழ்த்து

Admin 26 Oct 2026 | 01:08 PM
பகிர்:

கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல மணவிழாவில் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் நேரில் வாழ்த்து!

முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் இல்லத் திருமண வரவேற்பு விழாவில், வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் நேரில் கலந்துகொண்டு மணமக்களுக்குப் பூச்செண்டு வழங்கி வாழ்த்தினர்.

தமிழக முன்னாள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும், அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்களின் பேத்தியும், திருமதி உமா மகேஷ்வரி – சென்னை அப்பல்லோ மருத்துவர் திரு. பா. அருண்குமார் தம்பதியரின் அன்பு மகனுமான A. வைஸ்ணவ் மற்றும் நெல்லை சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் திரு. சரவணன் – திருமதி விஜயசங்கரி தம்பதியரின் அன்பு மகளான S. விகாஷினி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, 24.10.2026 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்றது.


இவ்விழாவில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மதிவேந்தன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. இராஜேந்திரபாலாஜி, திமுக நிர்வாகிகள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் பங்கேற்பு


சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில், சங்கத் தலைவர் செ. இராதாகிருஷ்ணன் தலைமையில் துணைத்தலைவர் ஆர். பெருமாள், துணைச்செயலாளர் ஏ.முருகன், ஒருங்கிணைப்பாளர் டி. சுப்பிரமணியன், மண்டலப் பொறுப்பாளர்கள் ஆர். ஆறுமுகச்சாமி, பாலவாக்கம் சீனிவாசன், கனகராஜ், ஹரீஷ் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.

சங்க நிர்வாகிகளை முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள் மணமக்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். தொடர்ந்து, சங்கத்தின் சார்பில் மணமக்களுக்கு நிர்வாகிகள் பூச்செண்டு வழங்கி, மணவாழ்க்கை சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு இராஜகம்பள சமுதாயம் சமுதாய நலச்சங்கம் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் செ. இராதாகிருஷ்ணன் திருமண விழா சமுதாய நிகழ்வுகள் சென்னை செய்திகள்
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண