தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
இராஜகம்பள சமுதாய நலச்சங்க நன்கொடையாளர்கள் இல்ல மணவிழா

இராஜகம்பள சமுதாய நலச்சங்க நன்கொடையாளர்கள் இல்ல மணவிழா

Radheyan 14 Apr 2026 | 08:31 PM
பகிர்:

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நன்கொடையாளர்கள் இல்லத்திருமண வரவேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை (12.04.2026) மாலை நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதன் விவரம் வருமாறு,

வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நன்கொடையாளர்களான ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கொண்டாமுத்தனூர் Dr. K.R.ரங்கராஜ் (Chairman, Unique Public School & Unique International School, Ooty) அவர்களின் சகோதரர் திரு.K.R.லோகுராஜ் – திருமதி.லதா அவர்களின் அன்புமகள் K.L. ஆர்த்தி B.E., - நாமக்கல் திரு.BN.தங்கவேல் – திருமதி B. செல்வமணி ஆகியோரின் அன்புமகன் T.S. சௌமி பிரசாத் B.E., ஆகியோரது திருமண வரவேற்பு ஞாயிற்றுக்கிழமை மாலை (12.04.2026) 6 மணியளவில் ‘நாமக்கல் பில்டர்ஸ் மஹால்” திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 


இதில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் திரு.செ.இராதாகிருஷ்ணன், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளைத் தலைவர் திரு.மு.பழனிச்சாமி, துணைத் தலைவர் திரு.நாராயணசாமி, தொழிலதிபர் திரு. எ.துரைசாமி, திரு.ஆர்.ஆறுமுகச்சாமி, திரு.மு.சரவணன், சர்வேயர் திரு.துரைசாமி, பிடிஓ திரு.மு.நாகப்பன், திரு.பூபதி, திரு.மணி, திரு.எர்ரப்பன், திரு.இரவி, திரு.ராஜு, திரு.முத்துச்சாமி, திரு.பிரபு, திரு.முருகேசன், திரு.ஜே.எம்.பழனியப்பன், திரு.நம்பிராஜ், திரு.டி.எம்.சந்தோஷ், மெடிக்கல் திரு.முத்துச்சாமி உள்ளிட்ட சங்க நன்கொடையாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

குறிச்சொற்கள்

சுப நிகழ்ச்சிகள் தமிழ்நாடு KNRRANGARAJ thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண