தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!

அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!

Admin 21 Jul 2026 | 04:49 PM
பகிர்:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அஇஅதிமுக) கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக, வக்கம்பாளையம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும் இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்தவருமான திரு. V.N. ரவி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி திரு. க. பழனிச்சாமி அவர்கள் பிறப்பித்துள்ளார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள வக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. V.N. ரவி, வக்கம்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராகப் பணியாற்றியவர். மேலும், அஇஅதிமுகவில் கிளைக் கழகச் செயலாளர், ஊராட்சிக் கழகச் செயலாளர், ஆனைமலை மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து, கட்சிப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி திரு. V. ஜெயராமன் அவர்களின் பரிந்துரையின் பேரில், திரு. V.N. ரவி அவர்கள் மாவட்ட துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தைத் தொடர்ந்து, இராஜகம்பள சமுதாயத்தைச் சேர்ந்த திரு. V.N. ரவி அவர்களுக்கு இந்த முக்கியப் பொறுப்பை வழங்கிய அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி திரு. க. பழனிச்சாமி அவர்களுக்கும், அவரது பெயரை பரிந்துரை செய்த கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பொள்ளாச்சி திரு. V. ஜெயராமன் அவர்களுக்கும், மாவட்ட இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திருமதி கஸ்தூரி வாசு அவர்களுக்கும் கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய பொறுப்பை வழங்கிய கழகத் தலைமையின் நம்பிக்கையைப் பெற்றிடும் வகையில், திரு. V.N. ரவி சிறப்பாகப் பணியாற்றி, மக்கள் மற்றும் கட்சிக்கு மேலும் பல சேவைகளை ஆற்றிட வேண்டும் என்று கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.டி. மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மகளிரணி அமைப்பாளர் பாக்கியலட்சுமி மற்றும் மதுக்கரை ஒன்றியச் செயலாளர் டி. சிவசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு V.N.Ravi AIADMK Edappadi K.Palanisamy thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண