இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கோவை தெற்கு மாவட்டத் தலைவரும், சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளருமான திரு. த. குணசேகரன் அவர்களின் தந்தையார் திரு. தங்கவேல் நாயக்கர் அவர்கள் இயற்கை எய்தினார். அன்னாரின் மறைவுக்குச் சமுதாயத் தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
"இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கோவை தெற்கு மாவட்டத் தலைவர் திரு. குணசேகரன் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தேன். தந்தையாரை இழந்து வாடும் திரு. குணசேகரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், திரு. தங்கவேல் நாயக்கர் அவர்களின் மறைவுக்குக் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. கே.டி. மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தில்குமார், மகளிரணி அமைப்பாளர் திருமதி. பாக்கியலட்சுமி ஆகியோரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் நேரில் சென்று அன்னாரது உடலுக்கு இறுதி அஞ்சலியும் செலுத்தினர்.
அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு இராஜகம்பள சமுதாயத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.