வாழ்த்து மழையில் இனமான போராளி!

இன்று 42-வது பிறந்தநாள் காணும் கம்பளத்தார்களை உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பும் இடிமுழுக்கம் இனமான போராளி நாமக்கல் தந்த வைரக்கல் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் அவர்களுக்கு சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
திரு.கொ.நாகராஜனின் பிறந்தநாளை முன்னிட்டு பல முன்னனி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையில் தலைவரும் மு.சட்டமன்ற உறுப்பினருமான திரு.உ.தனியரசு, RMR பாசறை தலைவரும், முன்னாள் தலைமைச் செயலாளருமான திரு.இராமமோகன் ராவ், நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் திரு.M.பழனிச்சாமி சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொருளாளர் திரு.இராமராஜ், தேனி திரு.சௌந்தரபாண்டியன் , விருதுநகர், திரு.மலைராஜன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.