தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார் • ஒரு பெண்ணின் கேள்விக்கு சபையே மௌனமானது! – திரௌபதியின் தர்மக் கேள்வி • உலகம் ‘மந்தமானவன்’ என்றது… தாய் ‘திறமைசாலி’ என்றார்! எடிசனை உருவாக்கிய அன்னையின் நம்பிக்கை • சுதந்திரத்தின் நிழலில் அடிமைத்தனம் – கிரேக்கமும் ரோமும் • இங்கிலாந்தின் கால்வாய் புரட்சியிலிருந்து சென்னையின் பக்கிங்ஹாம் கால்வாய் வரை – பகுதி 2: ஒரு கால்வாய் ஒரு நகரின் நிலக்கரி விலையை எப்படி பாதியாகக் குறைத்தது? • தொழில் களத்தில் வெற்றி… பேட்மிட்டன் களத்திலும் சாதனை! மாநில போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரவின்குமார்
விளம்பரங்கள்
தமிழக முதல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

தமிழக முதல்வருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Radheyan 01 Mar 2025 | 05:11 PM
பகிர்:

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தனது 72-வது பிறந்தநாளை இன்று (மார்ச்-1) கொண்டாடுகிறார். தமிழக முதல்வரின் பிறந்த நாளையொட்டி இந்தியப் பிரதமர், தமிழக ஆளுநர், கூட்டணிக் கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வரின் பிறந்தநாளையொட்டி நேற்று மாலை கொட்டிவாக்கத்தில் மிகப்பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் 23 கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு முதல்வரை வாழ்த்திப்பேசியதோடு, அகில இந்திய அளவில் அவர் ஆற்றவேண்டிய கடமைகளையும், மீதமுள்ள தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியதையும் சுட்டிக்காட்டிப்பேசினர்.

அரசியல் கட்சியினர் தவிர்த்து திரைத்துறையினர், பத்திரிக்கையாளர்கள், தொழிலதிபர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்தவகையில், வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

"மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தனது 72-வது பிறந்தநாள் கொண்டாடும் இவ்வேளையில், 40 லட்சம் இராஜகம்பள சமுதாய மக்களின் வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்வதோடு, தமிழக முதல்வர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் தமிழ்கூறும் நல்லுலகிற்கு தொடர்ந்து பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும்" என்று கூறியுள்ளார். 

மேலும், "தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட DNT சமூகங்களுக்கு ஒற்றை சாதிச்சான்றிதழ் வழங்கவேண்டும். டிஎன்டி பட்டியலில் இடம்பெற்றுள்ள 68 சாதியினருக்கும் மாவட்ட வரையறையின்றி அனைத்து பகுதிகளிலும் தங்குதடையின்றி டிஎன்டி சாதிச்சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட அரசியல் அதிகாரமற்ற சமூகங்களுக்கு கட்சியிலும், ஆட்சியிலும் உரிய வாய்ப்புகள் கிடைப்பதை தமிழக முதல்வர் உறுதி செய்வதோடு, கிராமப்புற உள்ளாட்சிகளை மறுவரை செய்து, எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிச்சொற்கள்

பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்நாடு mkstalin thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண