தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
கட்டபொம்மனுக்கு வீரவணக்கம்!- சகோதரத்துவம் போற்றும் கொங்கு இளைஞர் பேரவை!

கட்டபொம்மனுக்கு வீரவணக்கம்!- சகோதரத்துவம் போற்றும் கொங்கு இளைஞர் பேரவை!

Radheyan 06 Aug 2021 | 12:53 AM
பகிர்:

பொதுவாக சாதிய அமைப்புகள் ஆண்டபரம்பரை கதைபேசி, தங்கள் சமூகத்தில் பிறந்த முந்தையகால மன்னர்களின் படத்தைப்போட்டு, இளைஞர்களை உசுப்பேற்றி சாதி வெறியர்களாக மாற்றி அவர்களின் வாழ்க்கையை நாசமாக்குவதே பிரதானவேலை. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக கொங்கு இளைஞர் பேரவையின் தொண்டர்களை வார்ப்பிக்கின்றார் அதன் நிறுவன தலைவர் தனியரசு. கடந்த 2-ஆம் தேதி தீரன் சின்னமலையின் பிறந்தநாளன்று கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடிய கொங்கு இளைஞர் பேரவையின் தொண்டர்கள், ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்ட  அனைத்து தலைவர்களுக்கும் சாதி, மதம், இனம்,மொழி கடந்து வீரவணக்கம் செலுத்தியது ஆச்சரியமாக இருந்தது. பொதுவாகவே யாரையும் குறைசொல்லாமல், அனைத்துக்கட்சித் தலைவர்களையும் மரியாதையோடும், கண்ணியத்தோடும் தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் தனியரசு, தமிழகத்தில் பெருங்கொண்ட சமூகத்தைச்சேர்ந்த கட்சித்தொண்டர்களையும் அதே உணர்வுடனும், பொறுப்புடனும் வழிநடத்திச்செல்வது, மற்ற சமுதாய தலைவர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.


குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Thaniarasu thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண