🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இடஒதுக்கீடு தடையில்லை! நாயக்கர்களுக்கு நிவாரணம் உண்டு!

கல்வி, வேலைவாய்ப்பில் MBC - பிரிவுக்கு வழங்கப்பட்டுவந்த 20% இடஒதுக்கீட்டில் வன்னியர் சாதிக்கு மட்டும் 10.5% வழங்க சட்டம் 08/2021 வழிவகை செய்கிறது.  இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின்படி குறிப்பிட்ட எந்தவொரு சாதிக்கு மட்டும் தனியாக இடஒதுக்கீடு வழங்கமுடியாது என்பதையும், இது சம்மந்தமான உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளையும்  சுட்டிக்காட்டி தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பிரிவிலுள்ள சமுதாயங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 25.08.2021 அன்று நீதியரசர்கள் எம்.எம்.சுந்தரேசன் மற்றும் எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. வாத,பிரதிவாதங்களின் முடிவில் நீதிபதிகள் அளித்த உத்தரவின் அடிப்படையில், இந்த சட்டத்தால் தற்பொழுது நடைபெற்று வரும் பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கையில், வேலைவாய்ப்புகளில் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக உயர்நீதி மன்றத்தை நாடி நிவாரணம் பெற்றுக்கொள்ள வாய்ப்பினை வழங்கியுள்ளது.

அதன்படி, பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கைக்கு செல்பவர்களும், அரசுபணி நியமனங்களுக்கு செல்பவர்களும் எம்பிசி பிரிவுக்கான தேர்வின்பொழுது வன்னியர் சமூக மாணவர்கள் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சமுதாய மாணவர்களைக் காட்டிலும் குறைந்த மதிப்பெண் அல்லது கட்ஆப் மதிப்பெண் பெற்று, வன்னியருக்கு வழங்கியுள்ள 10.5% தனி இடஒதுக்கீட்டால் மட்டுமே வன்னிய மாணவர் சேர்க்கை/நியமனம் பெற்று, உங்களுக்கான வாய்ப்பு பறிபோய் இருந்தால்,  நாம் உடனடியாக நீதிமன்றத்தை நாடி அந்த இடத்தைப்பெறும் வாய்ப்பினை நீதிமன்றம்  வழங்கியுள்ளது.

ஆகையால் பள்ளி, கல்லூரிகளில் சேர்வதற்கு செல்பவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை நிரப்பும்பொழுது மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறது. அவ்வாறு பாதிக்கப்படும் தொட்டிய நாமக்கர் சமுதாய மாணவ-மாணவியர் கட்ஆப் மதிப்பெண் விபரங்களோடு கீழ்கண்ட அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு அல்லது வாட்ஸ் அப் செய்தி மூலம் 24 மணி நேரமும் கொண்டு உதவிபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் முறையிட்டு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும். நீதிமன்றம் செல்ல பயப்பட்டுக்கொண்டு இருக்கத்தேவையில்லை. நீதிமன்ற கட்டணங்களை நாங்களே ஏற்றுக்கொண்டு நிவாரணம் பெற்றுத்தர தயாராக உள்ளோம். இந்த வாய்ப்பிணை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம். 

தொடர்புக்கு:

1.தொட்டிய நாயக்கர்.காம்- 7395988767

2.விடுதலைக்களம் கட்சி- 9487066643

3.தொட்டியநாயக்கர் கல்வி அறக்கட்டளை நாமக்கல்- 99676064000

4.இராஜகம்பள மேன்மக்கள் அறக்கட்டளை- 9842181004

5.வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை- 9442646284

நமது தொட்டிய நாயக்கர்  சமுதாயத்தை சேர்ந்த, மாணவ மாணவியர், 10.5% இடஒதிக்கீட்டில், இந்த கல்வி ஆண்டில், கல்லூரி மாணவர் சேர்க்கையில், பாதிக்கப் பட்டவர்கள், உடனே, இழந்த சேர்க்கையை, திரும்ப பெறலாம் என நமது வழக்கை விசாரித்த நீதிபதி, 25.9.2021 அன்று ஆணைவழங்கியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவ-மாணவியர், உடனே தீர்ப்பின் நகலோடு, நீதிமன்றத்தை அணுகினால், உடனே, அட்மிஷன் கிடைக்கும். பாதிக்கப்பட்ட மாணவ-மாணவியர், பயன் பெறவும்.


இப்படிக்கு,

 சமூகநீதி கூட்டமைப்பு.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved