தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
DNT மக்களை தொடரும் துயரம்! ஆட்சி மாறினாலும், காட்சி மாறாத அவலநிலை!

DNT மக்களை தொடரும் துயரம்! ஆட்சி மாறினாலும், காட்சி மாறாத அவலநிலை!

Radheyan 09 Sep 2021 | 05:16 PM
பகிர்:

தமிழக சட்டமன்றத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (08.09.2021) புதன்கிழமை நடைபெற்றது. இதில் அத்துறையின் அமைச்சர் சிவசங்கர் பதிலளித்து பேசினார்.

இதில் தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்திருந்தபடி DNT ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என்ற அறிவிப்பை 68 சமுதாய மக்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அது குறித்தோ வன்னியர் உள் ஒதுக்கீட்டால் பாதிக்கபடுகின்ற சமுதாயங்களின் கோரிக்கை குறித்தோ ஒருவரி செய்திகூட இல்லாதது பொறுத்த ஏமாற்றம் அளிக்கிறது. இடஒதுக்கீடு பிரச்சனையில் திமுக பேசிவரும் சமூகநீதியைத் தாண்டி வாக்கு அரசியலையே பிரதானப்படுத்தி அதிமுக வழியில் செயல்படுவது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

தொடர்ந்து அரசுகளால் புறக்கணிக்கப்பட்டு வரும் 68 சமுதாயங்கள் கட்சிகளின் வாக்கு அரசியலை நன்கு உணர்ந்து, வாக்குகளை கட்சிகள் கொடுக்கும் பணத்திற்காக செலுத்தாமல் சமுதாய பிரச்சினைகள் அடிப்படையில் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Reservation Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண