தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
இராணிப்பேட்டையில் புவனேஸ்வரி பாண்டியன்!- வடக்கினை வெல்லட்டும்!

இராணிப்பேட்டையில் புவனேஸ்வரி பாண்டியன்!- வடக்கினை வெல்லட்டும்!

Radheyan 29 Sep 2021 | 03:53 PM
பகிர்:

துவாரசமுத்திரத்திலிருந்து புறப்பட்ட குமார கம்பணன் முதலில் தமிழகத்தின் வடபகுதியான காஞ்சிக்கு அருகிலுள்ள செங்களுநீர்ப்பற்று சுற்றுவட்டார சம்புவராயர்களை வென்றபின் தான் குமார கம்பணின் படைகள் மதுரை நோக்கி புறப்பட்டதாக "காவல் கோட்டம்" பேசுகிறது. 

எனவே கம்பளத்தார்களின் முதல் முற்றுகையும், வெற்றியும் அங்கிருந்து தான் தொடங்கி தென்பகுதியை நோக்கி நகர்கிறது. ஆகவே காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி போன்ற வட மாவட்டங்களில் கம்பளத்தார்கள் இருந்திருக்க வேண்டும்.  காலப்போக்கில் போக்குவரத்து வசதி, தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத காரணத்தால் உறவுச்சங்கிலி அறுந்திருக்கலாம்.  அதன்பின்னான கம்பளத்தார்களின் வாழ்வியல் தெற்கு, மேற்கு மாவட்டங்களை மையம் கொண்டதாகிவிட்டது. 

வரலாறு சுழல்கிறது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட 5-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு தொழிற்சங்கவாதி பாண்டியன் அவர்களின் மனைவி புவனேஸ்வரி அவர்கள் திமுகழக வேட்பாளராக களம் காணுகிறார். 

கம்பளத்தார் அரசியல் வரலாற்றில் வடக்குப்பகுதியில் புதிதாக உருவான இராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் வெற்றியாளராக புவனேஸ்வரி பாண்டியனாக அமையட்டும் என்று கூறி  கம்பளத்தார்களின் சார்பில் வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Election Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண