தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
தொட்டிய நாயக்கர்களுக்கு DNT சான்றிதழ் மறுப்பு! - விடுதலைக்களம் போராட்டம்!

தொட்டிய நாயக்கர்களுக்கு DNT சான்றிதழ் மறுப்பு! - விடுதலைக்களம் போராட்டம்!

Admin 02 Oct 2021 | 04:47 PM
பகிர்:

திருநெல்வேலியில் இருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல கிராமங்களில் வசித்து வருகின்றனர்.  இம்மாவட்டத்திலுள்ள தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் DNT பட்டியலில் வருகின்றனர். இம்மக்களுக்கு DNT சான்றிதழ் வழங்குவதற்கு அரசு தெளிவான உத்தரவு பிறப்பித்திருந்தும் அதிகாரிகள்  DNT சான்றிதழ் வழங்க மறுத்துவருகின்றனர்.  குறிப்பாக சிவகிரி வட்டத்தில் மட்டும் DNT சான்றிதழ்கோரி விண்ணப்பிக்கப்பட்ட 25-க்கும் மேற்பட்ட மனுக்கள் ஒரேநேரத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்றுவரும் நிலையில் அதிகாரிகள் பொறுப்பற்று நடந்துகொள்வது மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியதாக்கியுள்ளது. 

அரசாணையை நிறைவேற்றாத அதிகாரிகளின் எதோச்சதிகாரப்போக்கை கண்டிக்கும் வண்ணம் வரும் அக்டோபர்-25-ஆம் தேதி சிவகிரி வட்டாட்சியர் அலுவலகம் முன் விடுதலைக்களம் கட்சியின் நிறுவனதலைவர் கொ.நாகராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்போராட்டத்தில் தென்காசி மாவட்டத்திலுள்ள  சுற்றுவட்டார கிராமமாக மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு நமது உரிமையை மீட்டெடுக்க துணைபுரியுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Konagarajan thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண