தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
அதிமுக ஒன்றிய செயலாளராக திரு.பவுல்ராஜ் நியமனம் வாழ்த்துகள்!

அதிமுக ஒன்றிய செயலாளராக திரு.பவுல்ராஜ் நியமனம் வாழ்த்துகள்!

Radheyan 16 Oct 2021 | 05:27 PM
பகிர்:

கடந்த ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றத்தேர்தல் முடிவடைந்த நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் காலியாகயுள்ள கட்சி பொறுப்புகளுக்கு புதிதாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய புரட்சித் தலைவி அம்மா பேரவை ஒன்றியச்செயலாளராக  செண்பகப்புதூரைச் சேர்ந்த திரு.பவுல்ராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 

திரு.பவுல்ராஜ் அவர்கள் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் ஈரோடு மாவட்டத்தலைவராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமுதாய நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் ஆர்வமுடன் கலந்து கொள்பவர், மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள், நினைவுநாள் நிகழ்ச்சிகளை சத்தியமங்கலத்தில் பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கு இளைஞர்களுக்கும், சமுதாய அமைப்புகளுக்கும் பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்துவருபவர் திரு.பவுல்ராஜ். 

மேலும்,சென்னை, வீரபாண்டிய இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ஈரோடு மாவட்டத்திலுள்ள முக்கிய பிரமுகர்களுடன் கலந்து கொள்பவர். அங்கு உருவாகியுள்ள மூன்று மாடி கட்டிடம் அமைய நிதி உதவியளித்தவர் திரு.பவுல்ராஜ் அவர்கள்.

இப்புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு அரசியலில் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Pavulraj Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண