🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அரசு ஒதுக்கீட்டில் மேற்படிப்பு செல்ல கம்பளத்து மாணவச்செல்வங்களுக்கோர் அறிய வாய்ப்பு!

தமிழக கல்லூரிகளில்  இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், மருத்துவப் படிப்புகள், பொறியியல் படிப்புகள்  மற்ற தொழில் படிப்புகளில் சட்டம் 8/2021ன்படி MBC/DNTகளுக்கு வழங்கப்பட்ட 20 விழுக்காடு இடஒதுக்கீடு மூன்றாகப் பிரிக்கப்பட்டு வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடும், தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 93 MBC/DNT சமூகங்களுக்கு 7 விழுக்காடும், 22 MBC சமூகங்களுக்கு 2.5 விழுக்காடும் வழங்கப்படுகிறது. இதுவரை 20 விழுக்காடு இடங்கள் ஒட்டுமொத்த MBC சமுதாயங்களுக்கும் வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டுமுதல் புதிதாக கொண்டுவரப்பட்ட 8/2021 சட்டப்படி 10.5,7,2.5 என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டதால், தமிழகத்தில் பல கல்வி நிறுவனங்களில் MBC 20 விழுக்காடு இடங்கள் பூர்த்தியாகவில்லை. ஏற்கனவே தமிழகத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டின்கீழ் பூர்த்தியாகாத SC/ST  இடங்கள் MBC/DNTக்கும் MBC/DNT இடங்கள் BCக்கும்; BC இடங்கள் திறந்த இடங்களாகவும் பூர்த்தி செய்யும் நடைமுறை GO 682 நாள் 16.6.1989 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மேற்படி MBC மூன்று பிரிவில் பூர்த்தியாகாத இடங்கள் மீண்டும் கீழ்கண்ட ஒரு இடஒதுக்கீட்டு முறையில் செயல்படுத்தப்படும் என்று  அரசு அறிவிப்பு 475 நாள் 8.10.2021ல் வெளியிடப்பட்டுள்ளது. 

1. பூர்த்தியாகாத வன்னியர் இடங்கள் மற்ற இருபிரிவினருக்கும் 14:5 என்ற விகிதத்தில் பிரித்து வழங்கப்படும் என்றும்

2. பூர்த்தியாகாத MBC/DNT இடங்கள் மற்ற இருபிரிவினருக்கும் 21:5 என்ற விகிதத்தில் பிரித்து வழங்கப்படும் என்றும்

3. பூர்த்தியாகாத MBC இடங்கள் மற்ற இருபிரிவினருக்கும் 3:5 என்ற விகிதத்தில் பிரித்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சட்டம் 8/2021க்கு எதிரான வழக்கு நிலுவையில் இருக்கும்போது 8.10.2021ல் போடப்பட்ட அரசு அறிவிப்பு 26.10.2021 அன்று மேற்படி வழங்கு விசாரணை முடிந்தபின்தான் வெளியிடப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்கும் போது  தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 115 சமுதாயங்களுக்கு எதிராக அரசு நிறுவனங்கள் முழுமையாக தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.

எது எப்படி இருந்தாலும்,  இதுவரை அரசு ஒதுக்கீட்டில் குறைந்த கட்டணத்தில் கல்விபெற இடம் கிடைக்காத தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட MBC மாணவர்கள், தற்பொழுது அரசு வெளியிட்டுள்ள இந்த் அறிவிப்பைப் பயன்படுத்தி கிடைக்கின்ற இடங்களில் சேர்ந்துகொள்ளலாம். எந்த மாணவர்களுக்காவது இந்த உத்தரவுப்படி இடம்கிடைக்கவில்லையோ அவர்கள் சமூகநீதி நிர்வாகிகளை தொடர்புகொள்ளவும். 

மேற்படி வன்னிய இடஒதுக்கீடு சட்டத்தால் பாதிக்கப்பட்ட பிற சமுதாய மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தபடியால், வழக்குத்தொடர்ந்த 4 மாணவர்களுக்கும் இடம் கிடைத்துவிட்டது. மற்ற மாணவர்களுக்கு மேற்படி வழக்கு இறுதி விசாரணைக்கு வந்துவிட்டதால் வழக்கு ஏற்கப்படவில்லை.

join4socialjustice@gmail.com இந்த மெயிலில் விபரங்களை அனுப்பவும்.

சமூகநீதிக் கூட்டமைப்பு.
7010592827,9842155099,9865114446,9994261233,8610010230,9487367214,9443725367 9884745474,9443294892,9380153090,9345526696,9597302707,9789098186,9976323239

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved