🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வாய்ப்பு மறுக்கப்படும் இடங்களில் இளைஞர்கள் களம்காணுக!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரதான கட்சிகளில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட அமைச்சர் போன்ற முக்கிய பொறுப்புகளில் அந்தந்த மண்டலத்தில் உள்ள பெரும்பான்மை சமூகங்களை சார்ந்தவர்களே உள்ளனர். 

நகர்ப்புற உள்ளாட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அந்தந்த மாவட்ட செயலாளர்களே தேர்வு செய்யும் உரிமையை பெரும்பாலான கட்சிகள் ஒப்படைத்துள்ளதால் அவர்கள் தங்கள் இஷ்டம்போல் தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது உறவினர்களுக்கே பிற சமுதாயத்தினர் உள்ள இடங்களில் கூட வேட்பாளர்களாக அறிவிக்கும் நிலை உள்ளதாக தெரியவருகிறது. இந்தப்போக்கு ஆளும்  கட்சியில் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. 

அனைத்து சமூக வாக்குகளையும் அறுவடை செய்துகொண்டு ஆட்சியில் அமருபவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் சிறுபான்மை சாதியைச் சேர்ந்த கட்சி உறுப்பினர்களின் குறைந்தபட்ச ஆசையைக்கூட நிறைவேற்ற தவறுகின்றனர்.

எனவே கம்பளத்தார்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ள வார்டுகளில் பிரதான கட்சிகள் கம்பளத்தாருக்கு போட்டியிடும் வாய்ப்பினை வழங்கும் பட்சத்தில் அங்கு கட்சி சார்பற்ற நமது இளைஞர்கள் சுயோட்சையாகவோ அல்லது விடுதலைக்களம் கட்சியின் சின்னத்திலோ போட்டியிட முன்வரவேண்டும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved