தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
கம்பளத்தாருக்கு மேயர் வாய்ப்பு!- முதல்வருக்கு கோரிக்கை!

கம்பளத்தாருக்கு மேயர் வாய்ப்பு!- முதல்வருக்கு கோரிக்கை!

Radheyan 28 Feb 2022 | 04:18 PM
பகிர்:

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சிக்கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளதற்கு கூட்டணி கட்சித் தலைவரும் தமிழக முதலமைச்சருமான  முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கம்பளத்தாரின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அகில இந்திய அளவில் சமூகநீதி கோட்பாடுகளை கொண்டு செல்லவும், இந்தியாவில்  65 விழுக்காட்டிற்கும் அதிமாக வாழும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்டு வரும் அரசியல், நிர்வாக அதிகாரகங்களை பெற்றுத்தரவும் சமூக நீதியில் அக்கறையுள்ள இயக்கங்களை ஒன்றிணைக்கவும் தமிழக முதல்வர் எடுத்து வரும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவையும் நல்குகிறோம். 

அதேவேளையில் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான இராஜகம்பளத்து தொட்டியநாயக்கர் சமுதாயத்தினர் தமிழகம் முழுவதும் பரவலாக கிராமப்புறங்களில் வாழ்ந்து வருவதும், அவர்களில் பலர் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தீவிர விசுவாசிகளாக, கீழ்மட்ட பொறுப்பாளர்களாக இருந்துவருவதும் அரசியல் வட்டாரங்கள் அறிந்ததே.

அரசியல் இயக்க தொடர்பு, செயல்பாடுகள் பல்லாண்டுகாள அனுபவம் இருந்தபோதும் முதல்படிநிலை தாண்டி தங்களை முன்னேற்றிச்செல்லும் ஆற்றலில் பின்தங்கி விடுகின்றனர். சமூக பலம், பொருளாதார பலம் போன்றவைகள் காரணிகளாக கூறப்பட்டாலும், சமூக நீதி அடிப்படையில் அவர்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். 

இதுவரை அப்படியான வாய்ப்புகளை திராவிட முன்னேற்றக்கழகம் வாய்ப்புகளை வழங்கியதில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர கடமைப்பட்டுள்ளோம். 

திமுக அரசியல் வரலாற்றில் இதுவரை ஒரே ஒருமுறை தவிர கம்பளத்தார் ஒருவருக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற வாய்ப்புகளை கடந்த 60 ஆண்டுகளில் வழங்கியதில்லை என்பது கவலைக்குறியது. 

எனவே, தற்பொழுது நடைபெற்று முடிந்துள் ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட தொட்டிய நாயக்கர் சமுதாயத்தில் பலர் வெற்றிபெற்றுள்ள சூழ்நிலையில் அவர்களில் சிலருக்கு மேயர், நகர மன்ற தலைவர், பேரூராட்சி தலைவர் வாய்ப்புகளை வழங்கிடுமாறு சமுதாயத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Stalin Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண