தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
மகத்தான மக்கள்பணிக்கு உறுதியேற்கும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள்!

மகத்தான மக்கள்பணிக்கு உறுதியேற்கும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துகள்!

Radheyan 02 Mar 2022 | 04:37 PM
பகிர்:

கடந்த பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாமன்ற, நகராட்சி, பேரூராட்சி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்கின்றனர். மாநிலம் முழுவதுமுள்ள அந்தந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் இதற்கென நியமிக்கப்பட்ட அதிகாரிகள் உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக்காப்பு பிரமாணமும் செய்துவைக்கின்றனர். 


தமிழகத்தில் கோவை, ஈரோடு,கரூர்,திருப்பூர்,திண்டுக்கல்,நாமக்கல்,இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு கட்சிகளின் வேட்பாளராக களமிறங்கி வெற்றிபெற்றுள்ள இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பதவியேற்றுக் கொள்கின்றனர்.


புதிதாக பொறுப்பேற்கும் மக்கள் பிரதிநிதிகள் மக்களின் எதிர்பார்ப்பு, நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில், வாய்ப்பு வழங்கிய கட்சியின் மீதான விசுவாசத்தோடு, சாதி, மதம், இனம், மொழி பேதம் கடந்து மனிதநேயத்தோடு மக்கள்பணியாற்றி அரசியல் பொதுவாழ்வில் மேன்மேலும் உயர கம்பளத்து மக்கள் அனைவரின் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Urbanbody elections thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண