🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பலமடங்கு உயரும் சொத்துவரி! - ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொறுப்பாளர்!

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த மேலூர் சட்டமன்ற உறுப்பினருடன் அ.காசிராஜன்.

மக்கள் நலனில் என்றும் அக்கறை உள்ள அதிமுக சார்பில்,மக்களை வஞ்சிக்கும் திமுக அரசின் சொத்து வரி உயர்வைக் கண்டித்து, புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா ஆகியோரின் தெய்வீக ஆசியுடன், கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு OPS, இணை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு EPS ஆகியோரின் ஆணைக்கிணங்க, இன்று மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் எல்லா மாவட்டங்களிலும் நடைபெற்றது. 

தமிழ் நாட்டில் கடந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஏராளமான வாக்குறுதிகளை வாரி வழங்கி தமிழக மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, முக்கிய வாக்குறுதிகளான  ஐந்து பவுனுக்கு குறைவான நகைக் கடன் தள்ளுபடி,ஒவ்வொரு மாதமும் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய், மாணவ மாணவிகளுக்கு நீட் தேர்வு ரத்து போன்ற இன்னும் பல திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் காலம் கடத்திக் கொண்டே வருகிறது.இந்த நிலையில் தற்போது மக்களைக் கடுமையாகப் பாதிக்கும் வகையில் சொத்து வரி உயர்வை அறிவிப்புச் செய்து மக்களின் தலையில் சுமையை ஏற்றி இருக்கிறது. உலக நாடுகளே கொரோனா என்ற கொடிய நோயின் தாக்கத்தில் இருந்து இன்னும் முழுமையாக பொருளாதாரத்தில் மீழாமல் உள்ளது என்பதையும் மீறி இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையில் இறங்குகிறது திமுக. 


முந்தைய அதிமுக ஆட்சியில் பெயரளவில் வரி உயர்த்தியபோது எதிர்ப்புக் குரல் எழுப்பியது மட்டும் அல்லாது, இது வரி உயர்வா இல்லை சொத்து அபகரிப்பு உயர்வா என விமர்சனம் செய்த திமுக, தற்போது அளவுக்கு அதிகமான வரியை உயர்த்தி உள்ளது. இதனால் திமுக அரசைக் கண்டித்து,  மாவட்டம் தோறும்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளுடன், மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் ஆகிய நானும்(அ.காசிராஜன்) கலந்து கொண்டேன்.

ஏற்கனவே அத்தியாவசியமான மருந்து பொருட்கள் விலை உயர்வு, ஆவின் பால்விலை உயர்வு, பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வு மூலம் பல சிரமங்களை சந்தித்து வரும் தமிழக மக்கள், தற்போது மேலும் ஒரு விலை உயர்வை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் அல்லல்படும் அவல நிலைக்குத் தள்ளிய திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அ.காசிராஜன்

மாவட்ட இலக்கிய அணி துணைச்செயலாளர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved