தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
கம்பளத்தார் மீது காட்டுமிரண்டித் தாக்குதல்! சூறையாடப்பட்ட வீடுகள்!

கம்பளத்தார் மீது காட்டுமிரண்டித் தாக்குதல்! சூறையாடப்பட்ட வீடுகள்!

Radheyan 16 Apr 2022 | 04:29 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம் கே வாகைகுளம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற வன்முறையில் கம்பளத்தார் சமுதாயத்தவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்து விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் திருச்சுழி அருகே உள்ள கே வாகைகுளம் கிராமத்தில் வசிக்கும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சார்ந்தவர்களின் வீடுகள் மீது நேற்று (15/4/2022- வெள்ளிக்கிழமை)  மாலை 3 மணி அளவில் சமூக விரோதிகள் சிலரால் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. இந்த சமூக விரோத செயலை விடுதலைக்களம் கட்சி மிக வன்மையாக கண்டிப்பதோடு,  இச்சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்களை  தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைக்களம் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும் கே வாகைகுளத்தில் வசிக்கும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் விடுதலைக்களம் கட்சி வலியுறுத்துகிறது.

இச்சம்பவம் குறித்து நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க நாளை (17/04/2022) காலை 11 மணி அளவில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவனத் தலைவர் கொ நாகராஜன்  கே வாகைக்குளம் கிராமத்திற்கு செல்லவுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் நடைபெறும் சாதிய வன்முறைகளில் கம்பளத்தார் சமூகம் தாக்குதலுக்கு உள்ளாவது சமீப காலங்களில் அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது. இதற்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய சீர்திருத்த நடவடிக்கைகளை செய்யவேண்டியது அவசியம். இதற்கு அப்பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் முன்வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Viruthunagar thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண