🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அமைச்சர்களுடன் சந்திப்பு!

வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு சிறப்பு சட்டம் 8/2021 ஐ  உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முறையான இடஒதுக்கீடு வழங்கவேண்டும், தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சீர்மரபினர் வகுப்பினருக்கு DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சமுதாய தலைவர்கள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மதிவேந்தன் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். 


மனுவினை பெற்றுக்கொண்ட அமைச்சர்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தனர்.

நாமக்கல் மூத்த வழக்கறிஞர் பழனிச்சாமி அவர்களின் தலைமையில் சென்றிருந்த இந்தக் குழுவில் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, பொருளாளர் சின்னச்சாமி, முன்னாள் பிடிஓ. நாகப்பன், திருச்செங்கோடு சரவணன்,  வெங்கடேஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved