தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #04 – சிறிய முயலும்... பெரிய சிங்கமும்! • 40 டிரில்லியன் டாலர் கடன் – அமெரிக்காவை எச்சரிக்கும் ஒரு கடிகாரத்தின் கதை! • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா!
விளம்பரங்கள்
கட்டபொம்மனாரை இழிவுபடுத்தி வயிறு வளர்க்கும் பாரிசாலனை கைதுசெய்க!

கட்டபொம்மனாரை இழிவுபடுத்தி வயிறு வளர்க்கும் பாரிசாலனை கைதுசெய்க!

Radheyan 17 May 2022 | 02:00 AM
பகிர்:
போலி தமிழ்தேசியவாதிகள் தங்களை அரசியலில் அடையாளப்படுத்திக் கொள்வதற்காக தொடர்ந்து மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து அவதூறு பரப்புவது வாடிக்கையாக உள்ளது. கடந்த ஓராண்டாக குறைந்திருந்த இந்த அவதூறு பேச்சினை பாரிசாலன் என்ற இளைஞன் மீண்டும் கையிலெடுத்துள்ளான். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த பாரிசாலன், மாவீரன் கட்டபொம்மனாரை திருடன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பசித்தால் உழைத்து சாப்பிட வக்கில்லாத கூட்டம் சமூக ஊடகங்களில் கட்டபொம்மன், தெலுங்கர்கள் குறித்துப்பேசி அதில்கிடைக்கும் புகழைக்கொண்டு வயிறு வளர்க்கத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் ஒட்டுமொத்த வணிகத்தையும், பெருமளவு நிலங்களையும் வடமாநிலத்தவர்கள் கைப்பற்றி வருவதாக ஆதாரப்பூர்வமாக தமிழ்தேசிய இயக்கங்களைச் சேர்ந்த தோழர் அய்யநாதன், தோழர். திருமுருகன் காந்தி போன்றோர் அபாயமணி அடித்து வருகையில், அதுகுறித்து கவலைப்படாத போலி தமிதேசியவாதிகள், தமிழகத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவரும் தெலுங்கின மக்களை குறிவைத்து தாக்கிப்பேசுவது, இவர்கள் யாரின் கைக்கூலிகளாக செயல்படுகின்றனர் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

தமிழகத்தில் இரண்டாவது பெரும்பான்மை மொழிபேசுபவர்கள் குறித்து தப்பும் தவறுமாக பேசி தமிழகத்தின் அமைதியை சீர்குழைக்க முயலும் பாரிசாலனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மதுரை மாநகர் காவல் துறை ஆணையாளரிடம் த.வீ.க.பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஏகாதிபத்தியதை எதிர்த்து வீரத்தோடு போரிட்டு, தூக்கு கயிற்றை முத்தமிட்டு மடிந்த, பாஞ்சாலங்குறிச்சி மாமன்னர் கட்டபொம்மனாரை, சமூக ஊடகங்களில் அவதூறாக சித்தரித்து செய்திகளை வெளியிட்டு வரும் சமுகவிரோதி பாரிசாலனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் இளைஞரணி செயலாளர் பூப்பாண்டி தலைமையில் சென்ற குழுவில் சார்பில் சட்ட ஆலோசகர் நாகராஜன், வழக்கறிஞர்கள் நோட்டம் வெங்கிடசாமி, எல். சரவணன்,ஜி. பழனிவேல்முருகன், கே.அருண்குமார், ஆர். பாலாஜி உள்ளிட்டோரும், TN. சந்திரபோஸ், V. அசோக்,பாலமுருகன்
ரத்தினம்,முருகபெருமாள்,புலிசேகர்,ஜெயராமன்,இளையராஜா,தனிக்கொடி,பெத்து பெருமாள்,மணிவண்ணன்,சீனிவாசன்,அழகர்சாமி உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Poopandi thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண