தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
மாநில சிறப்பு அழைப்பாளர் மற்றும் திட்ட பொறுப்பாளராக திரு.பாண்டியன் நியமனம்! பணிச்சிறக்க வாழ்த்துகள்!

மாநில சிறப்பு அழைப்பாளர் மற்றும் திட்ட பொறுப்பாளராக திரு.பாண்டியன் நியமனம்! பணிச்சிறக்க வாழ்த்துகள்!

Radheyan 22 Jul 2022 | 11:55 PM
பகிர்:

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்மாநில தலைவராக அண்ணாமலை ஐபிஏஸ் நியமிக்கப்பட்டு ஓராண்டு ஆகியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பாஜகவிலுள்ள பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். எல்லா தரப்பு மக்களுக்கும் அரசியல் வாய்ப்புகளை வழங்குவதற்கு ஏதுவாக மீனவர் அணி, ஓபிசி அணி, விவசாய அணி, சிறுபான்மையினர் அணி, விருந்தோம்பல் அணி, அறிவுசார் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, வர்த்தக அணி என எண்ணற்ற அமைப்புகளை உருவாக்கி வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக இராஜகம்பளத்து தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினரும் பாஜகவில் இணைந்து வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். மாநில செயலாளர்,மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர், வழக்கறிஞர் பிரிவுகளில் பதவிகளை பெற்றுள்ள நிலையில், தற்பொழுது மாநில சிறப்பு அழைப்பாளர் மற்றும் திட்ட பொறுப்பாளராக விருதுநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திரு.R.பாண்டியன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மாநில சிறப்பு அழைப்பாளர் மற்றும் திட்ட பொறுப்பாளராக R.பாண்டியன் அவர்களை நியமனம் செய்ய பரிந்துரை மாநில தலைவர் அண்ணாமலை, அமைப்புச்செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட தலைவர்களுக்கும், மாவட்ட, மாநில நிர்வாகிகளுக்கும் இராஜகம்பளத்தார் சமுதாயத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Mr.Pandiyan Thottianaicker thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண