தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
ஆறுமுகக்கவுண்டனூரில் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் தேர்வு!

ஆறுமுகக்கவுண்டனூரில் இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் தேர்வு!

Radheyan 16 Aug 2022 | 04:27 PM
பகிர்:

கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் கடந்த 31.07.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கிராமம் தோறும் கிளைகள் அமைக்கப்பட்டு வருகிறது. சமுதாய நலச்சங்கத்தில் இணைந்து பணியாற்ற பெண்களும் ஆர்வம் காட்டியதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை 14.08.2022 ஈச்சனாரியில் மகளிர் அணி தொடக்கவிழா நடைபெற்றது.

இதந்தொடர்ச்சியாக கோவை வடக்கு மாவட்டத்திலுள்ள ஆறுமுக கவுண்டனூரில் நலச்சங்க கிளை  நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான கூட்டம்  ஊர் நாயக்கர் திரு நாராயணசாமி அவர்கள் தலைமையில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று மாலை (15.08.2022) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊர் பெரியவர்கள் முன்னிலை வகித்தனர். இதில்  கிளை தலைவராக என்.மாரிமுத்து, கிளை துணைத் தலைவராக ஜே.கிருஷ்ணமூர்த்தி. கிளைச் செயலாளராக பி எம் டி ஜெயபால், கிளை துணைச் செயலாளர்களாக ஆர் பிரகாஷ், எஸ். சரத்குமார், ஆர் தேவராஜன், கிளை பொருளாளராக எஸ். முத்துக்குமார் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் ஈச்சனாரி எம். சிவக்குமார், மாவட்ட செய்தித் தொடர்பாளர் பி செந்தில்குமார், மாவட்ட துணைச் செயலாளர் மாச்சநாயக்கன்பாளையம் சண்முக குமார் மற்றும் மண்ணூர் மகாலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இராஜகம்பள சமுதாய நலச்சங்க நிர்வாகிகளாக தேர்வு செய்யப்படுள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும், உறுதுணையாக இருந்த மாவட்ட தலைவர்களுக்கும் தலைமையின் சார்பில் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Kovai Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண