தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
சமுதாய பணியில் ஆர்வம்காட்டும் பெண்கள்! மகளிர் அணியோடு புதிய கிளை உதயம்!

சமுதாய பணியில் ஆர்வம்காட்டும் பெண்கள்! மகளிர் அணியோடு புதிய கிளை உதயம்!

Radheyan 07 Sep 2022 | 01:44 AM
பகிர்:

கோவை தெற்கு மாவட்டம் ராஜகம்பள சமுதாய நல சங்கத்தின் மாசநாயக்கன்புதூர் கிளை துவக்க விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (04.09.2022) நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு ஊர்நாயக்கர் சுப்பிரமணிய நாயக்கர், கொத்துக்காரர் கமலக்கண்ணன், தாமரைக்குளம் களத்துவீடு துரைசாமி நாயக்கர், வால்பாறை ராமசாமி நாயக்கர், ஓய்வுபெற்ற மின்வாரிய பொறியாளர் மாரிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டத் துணைச்செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்பு உரையாற்ற, வைகோ என்கிற சுரேஷ்குமார், ஈஸ்வரன், அண்ணாதுரை, சதீஷ்குமார், பட்டக்காரர் ராஜேந்திரன், சிவராஜ், ரவிக்குமார், வெங்கடாசலம், தங்கராஜ், நாகராஜ், அருணகிரி, நஞ்சுண்டசாமி, ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை அறிமுகப்படுத்தி வாழ்த்துரை வழங்கிய ஒருங்கிணைந்த கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குள்ளக்காபாளையம் கே.டி.மோகன்ராஜ், சமகால அரசியல், எதிர்கால அரசியல் நடவடிக்கை, இடஒதுக்கீடு பிரச்சினை, சமுதாய பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துதல் குறித்து விரிவாக பேசினார். இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் கோவை மாவட்டத்தில் இராஜகம்பள சமுதாய நல்ச்சங்கம் வேகமாக வளர்ந்து வருவதாகவும், கோவை ஒரு முன்மாதிரி மாவட்டமாக விளங்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து கொள்கை பரப்புச் செயலாளர் ஆர்.ஏ.கணேசன், தாமரைக்குளம் குமரேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.


மேலும் இக்கூட்டத்தில், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஈச்சனாரி இரா .காளிமுத்து, தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பூரணச்சந்திரன்,  தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் குள்ளக்காபாளையம் குணசேகரன், தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் சந்தேககவுண்டம்பாளையம் தமிழ்ச்செல்வன், வடக்கு மாவட்ட பொருளாளர் மாச்சநாய்க்கன்பாளையம் கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக வைகோ சுரேஷ் நன்றி உரையாற்றினார்.


இதுதவிர, இதில் ஈச்சனாரி மகளிர் அணி தலைவர் பாக்கியலட்சுமி, துணைத்தலைவர் மேகலா, பொருளாளர் லலிதாம்பிகை, துணைச்செயலாளர்கள் சுவாதி, கலைச்செல்வி, ஆலோசகர் சிவனேஸ்வரி, செயற்குழு உறுப்பினர் லதா ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.


மாச்சநாயக்கன்பாளையம் கிளை நிர்வாகிகள் பட்டியல் பின்வருமாறு. தலைவர் K.மகேந்திரன், துணைத்தலைவர் N.கார்த்திக், செயலாளர் K.வினோத்குமார், இணைச்செயலாளர் R.பிரபு, துணைச்செயலாளர் T.வீரபூபதி, துணைச்செயலாளர் ஆர்.விஜயகுமார், பொருளாளர் K. விவேக், ஆலோசகர்களாக P.சின்னச்சாமி என்கின்ற நஞ்சுண்டசாமி, S.கனகராஜ், M.ரங்கநாதன், P.கமலக்கண்ணன், R.நஞ்சுண்டசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


மகளிரணி நிர்வாகிகளாக தலைவர் நிர்மலா, செயலாளர் ராதா, பொருளாளர் மதுபாலா ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.


மாச்சநாயக்கன்பாளையம் கிளையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Masanaickenpalayam thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண