தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
அரசுத்தேர்வு கம்பளத்தாருக்கு இலவச பயிற்சிக்கான விண்ணப்பம் வெளியீடு!

அரசுத்தேர்வு கம்பளத்தாருக்கு இலவச பயிற்சிக்கான விண்ணப்பம் வெளியீடு!

Radheyan 01 Nov 2022 | 11:43 PM
பகிர்:

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (TNPSC) சார்பில் குரூப்-1 சர்வீஸ் முதல் 51 வகையான பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளுக்கு, கம்பளத்து சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தரமான பயிற்சி வழங்க சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் முயற்சி மேற்கொண்டுவருகிறது. சென்னை அண்ணாநகரில் இயங்கிவரும் மேத்தா ஐஏஎஸ் அகாடமி மூலம் வழங்கப்படும் பயிற்சி கட்டணத்தை சென்னை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் வழங்கிட உத்தேசித்துள்ளது. கூடுதலாக இலவசமாக தங்கும் வசதிக்கு (ஆண்களுக்கு மட்டும்) நலச்சங்க கட்டிடத்தை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.


இதனடிப்படையில், இப்பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சிக்கட்டணத்தை பெறுவதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட உள்ளது. பயிற்சி பெற விரும்பும் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த கொல்லவார், சில்லவார், தோக்கலவார், எர்ர கொல்லவார் பிரிவு விண்ணப்பதாரர்கள், நேரடி கலந்தாய்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பரிந்துரைகள், 1950-இல் தொடங்கப்பட்ட இராஜகம்பள மகாஜனசங்கம் உள்ளிட்ட  அனைத்து அமைப்புகளில் இணைந்து சமுதாயப்பணியாற்றிய குடும்ப உறுப்பினர்களுக்கும் முன்னுரிமை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவும். வந்து சேரவேண்டிய கடைசி தேதி 30.11.2022.

 https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdZ2ucDv9HnKVyeNw8Iqx4wWie-3uPcQ2DrjiW63Lhk0W8Cew/viewform?usp=sf_link

மேற்படி லிங்க்கை மற்ற உறவுகளுக்கு பகிரவும் .  மேலும் விபரங்களுக்கும், உதவிக்கும் 7395988767 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்.  

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு TNPSC Group Exam Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண