🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஏமாற்றிய உச்சநீதிமன்றம்! கைகொடுக்குமா உயர்நீதிமன்றம்!

குழிபறித்த உச்சநீதிமன்றம்! கைகொடுக்குமா உயர்நீதிமன்றம்!

எந்தவித போராட்டங்களோ, தரவுகளோ இன்றி உயர்சாதிகளுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவிட்ட நிலையில், நாட்டில் 70 விழுக்காடு மக்கள்தொகையுள்ள ஓபிசி வகுப்பினர் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுத்து உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை, சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆட்சியாளர்கள் மற்றும் நீதிமன்றங்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் இக்கோரிக்கையை 2021-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இறுதி விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

இந்த வழக்கில் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் ஆஜராக உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் அவர்கள் டெல்லியில் இருந்து இன்று காலை விமானம் மூலம் வந்து சேர்ந்தார். அவரை சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் நாகரத்தினம், இராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மதுரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved