தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்! • ஒன்றியச் செயலாளருக்கு கிளைக் கழக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து! • கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனம் – தகுதியான இராஜகம்பளத்தார் விண்ணப்பிக்கலாம் • பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு! • கம்பளத்தார் சமூக முன்னேற்றத்தில் பெருந்தலைவர் காமராஜரின் பங்களிப்பு! • அஇஅதிமுக கோவை புறநகர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக திரு. V.N. ரவி நியமனம்!
விளம்பரங்கள்
அனைத்துக்கட்சிக் கூட்டம்! வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்குக!

அனைத்துக்கட்சிக் கூட்டம்! வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்குக!

Radheyan 13 Nov 2022 | 01:19 AM
பகிர்:

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு (EWS) 10 % விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் அமைப்புச்சட்டத்தின் 103-வது சட்ட திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் சட்டதிருத்தத்திற்கு ஆதராக தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு கூட்டிய சட்டமன்ற அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று காலை முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திமுக, மதிமுக, காங்கிரஸ்,பாமக, த.வா.க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். அதிமுக மற்றும் பாஜக, புதிய பாரதம் கட்சிகள் புறக்கணித்தன. 

இக்கூட்டத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதென ஏகமனுதாக முடிவெடுக்கப்பட்டது.  இச்சட்ட திருத்தம் 2019-இல் கொண்டு வரப்பட்டபொழுது அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்காத நிலையில், திமுக, விசிக உள்ளிட்ட 40 மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன. பிரதான வழக்கில் தமிழக அரசு மனுதாரராக இல்லாத நிலையில், அரசு சார்பில் மறுசிராய்வு மனு தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. இருந்தபோதிலும் சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து வய்ப்புகளை ஆராய தீர்மானிக்கப்பட்டது.

அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை வரவேற்பதோடு, தமிழக அரசு உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி,  அனைத்து சாதியினருக்கும் விகிதாச்சார இடஒதுக்கீடு முறையை கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளில் பின்பற்ற வேண்டும் என்று வீ.க.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் வலியுறுத்துகிறது.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Reservation thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண