தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
முதுநிலை மருத்துவ நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் நெ.1 !

முதுநிலை மருத்துவ நுழைவுத்தேர்வில் அகில இந்திய அளவில் நெ.1 !

Radheyan 14 Nov 2022 | 11:46 PM
பகிர்:

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் முன்னாள் உறுப்பினரும், சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவருமான மறைந்த வெள்ளைச்சாமி அவர்களின் மகள் வயிற்றுப்பெயர்த்தியும், திரு.மனோகரன் - திருமதி. யசோதா அவர்களின் மகள் செல்வி.M.Y.கார்த்திகா, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் BSMS இறுதியாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், அலோபதி மருத்துவ படிப்பிற்கு "நீட்" தேர்வு நடத்தப்படுவது போல், சித்த மருத்துவ மேற்படிப்பிற்காக, தேசிய தேர்வு முகமை நடத்தும் "அகில இந்திய ஆயுஷ் முதுநிலை படிப்பிற்கான நுழைவுத்தேர்வில்"  480 மதிப்பெண்ணிற்கு 383 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். 

தேசிய அளவில் முதலிடம் பெற்ற செல்வி.கார்த்திகா-விற்கு வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எந்தத்துறையிலும் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை சித்த மருத்துவத்துறையில் நிரூபித்து சென்னை, தாம்பரத்திலுள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் மேற்படிப்பில் சேரவுள்ள செல்வி.M.Y.கார்த்திகா-விற்கு சமுதாயத்தின் சார்பில் அன்புநிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு M.Y.Karthika Thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண