தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
இல்லம் தேடி காலண்டர்! சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் தீவிரம்!

இல்லம் தேடி காலண்டர்! சமுதாய நலச்சங்க நிர்வாகிகள் தீவிரம்!

Radheyan 15 Dec 2022 | 05:36 PM
பகிர்:

சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் அச்சிடப்பட்ட 2023-ஆம் ஆண்டுக்கான தினசரி காலண்டர் உறுப்பினர்கள் இல்லம் தேடி கொண்டு சேர்க்கும் பணியில் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களும், மண்டல பொறுப்பாளர்களுமான C. குருசாமி மற்றும் S. செல்வராஜ் ஆகியோர் டிசம்பர் முதல்வாரத்தில் தொடங்கினர்.


மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டிருந்த காலண்டர் விநியோகிக்கும் பணி பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களாக துணைத்தலைவர் R.பெருமாள், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தரராஜன், தங்கம்,சுப்பிரமணி, சரவணன், சிவராமன் உள்ளிட்டோர் வட சென்னை பகுதியில் சங்க உறுப்பினர்கள் இல்லம் தேடிச் சென்று காலண்டர் விநியோகம் செய்வதோடு, முப்பெரும் விழாவிற்கான அழைப்பையும் வழங்கி வருகின்றனர்.


இதேபோல் கோவை மாவட்ட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட தினசரி காலண்டரை, கோவை மாவட்ட கம்பளத்தார் இல்லம் தோறும் சென்று நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர்.


தன்னலம் கருதாது சமுதாயப்பணியை மேற்கொண்டுள்ள உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ள தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், காலண்டர் கொண்டு வரும் சமுதாய சேவகர்களை அன்புடன் வரவேற்று கௌரவிக்குமாறும், உறுப்பினர் சந்தா மற்றும் முப்பெரும்விழா நன்கொடையினை வாரி வழங்குமாறும் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.   

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு VPKSangam thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண