🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மூத்தோர்கள் முன்னெடுக்கும் முப்பெரும்விழா!

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், சென்னை, சார்பில்  ஜனவரி'29-ஆம் தேதி தலைநகரில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கில் முப்பெரும்விழாவினை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் ஒரு மாவட்ட அமைப்பாக இருந்தாலும், தொடக்ககால முன்னோடி தலைவர்கள் சங்கம் தொடங்கப்பட்ட நோக்கத்தையும், செயல்பட வேண்டிய வழிமுறைகளையும் நன்கு திட்டமிட்டு வடிவமைத்துள்ளனர். அதன்படி சங்கத்தை நடத்துவதும், திட்டங்களை செயல்படுத்துவதும் மட்டுமே நிர்வாகத்தின் வேலை. இதன் முழுப்பலன்களும் கிராமங்களின் எங்கோ ஒரு மூலை முடுக்குகளில் வாழும் ஏழை எளிய, வாய்ப்பு வசதியற்ற மக்களுக்காகவும், அரசியல், தொழில், கல்வி உள்ளிட்ட அரங்குகளில் வாய்ப்புகளும், உரிமைகளும் மறுக்கப்படும் போதும், புறக்கணிக்கப்படும் போதும்,  அவர்களுக்காக சமூகத்தை ஒன்று திரட்டும் பணியுமே பிரதானமானது.


மூத்தோர்கள் வகுத்துக்கொடுத்துள்ள பாதையில் பயணித்து வரும் இச்சங்கம், பல்வேறு சகோதர அமைப்புகளோடும் நல்லிணக்கத்தோடும், நல்லுறவோடும் இருந்து வருகிறது. இதன்பலனாக, பெயரளவில் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய சங்கம் நடத்தவுள்ள முப்பெரும் விழா என்றாலும், விழாவினை வெற்றிகரமாக நடத்தி முடிக்க சகோதர அமைப்புகளின் நிர்வாகிகளும், சமுதாய மூத்த தலைவர்களும் உரிமையோடு தாங்களாகவே முன்வந்து பணியாற்றி வருகின்றனர்.

நாமக்கல் அறக்கட்டளை சார்பில் மு.பழனிச்சாமி, சர்வேயர் துரைச்சாமி, மணி, சரவணன், மனோகர் உள்ளிட்ட நிர்வாகிகள், விருதுநகர் கட்டபொம்மன் கல்வி அறக்கட்டளை சார்பில் மலைராஜன், காசிராஜன், கண்ணன், விஜயராஜ், தங்கபாண்டியன், முருகன் உள்ளிட்டோரும், கோட்டைபட்ட எர்றகொல்ல நலச்சங்கத்தின் சதீஷ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளும், சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இராமராஜ், கம்பள விருட்சம் அறக்கட்டளையின் உடுமலை சிவக்குமார் உள்ளிட்டோர் முப்பெரும்விழாவினை வெற்றிகரமாக நடத்திமுடிக்க பொருளாதார ரீதியாகவும், பிரச்சார ரீதியாகவும் முழுயாக பங்காற்றி வருகின்றனர்.


இது தவிர தனி நபர்களாக சின்னப்பம்பாளையம் பூபதி, மாச்சநாயக்கன்பாளையம் சிவசாமி, கணேசன், திருப்பூர் துரைசாமி, லாரி சண்முகம், ரத்தினசாமி, நாமக்கல் நாகப்பன், மனோகர், சின்னச்சாமி,பூபதி, நாகராஜன், ஈரோடு பவுல்ராஜ், நடராஜ், மோகன், பங்காருராஜ், வழக்கறிஞர் சுரேஷ்குமார், பழனி டிஆர்ஓ (ஓ) அசோகன், காவளப்பட்டி ராஜு, போடி சவுந்திரபாண்டியன், சின்ன நாட்டாமை ரமேஷ், ரமேஷ்பாபு, கரூர் சின்னசாமி, ஏகாம்பரம், சத்தியமூர்த்தி உள்ளிட்டோரும், இன்னும் முகம் தெரியாத பலரும் முப்பெரும்விழாவினை வெற்றிகரமாக நடத்திட நல்லாதரவை வழங்கி வருகின்றனர். 

தவிர,தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், சாமானிய மக்களும் தொடர்ந்து தொலைபேசி வாயிலாக நிர்வாகிகளுக்கு உற்சாகமளித்து வருகின்றனர். த.வீ.க.பண்பாட்டுக் கழகத்தின் கௌரவ தலைவர் நல்லாசிரியர் சங்கரவேலு, டி.இ.ஓ (ஓ) ராஜூ, எரிச்சனத்தம் சங்கையா, பாஞ்சை சக்கதேவிகோவில் செந்தில்குமார், பாளையங்கோட்டை மாரிச்சாமி உள்ளிட்ட பலர் முப்பெரும் விழாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முப்பெரும்விழாவிற்கு பல்வேறு தரப்பிலிருந்து தொடர்ந்து வரும் ஆதரவிற்கு வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved