🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கலாநிதி-கண்ணன் வேண்டுகோள்!-உடனடி உத்தரவிட்ட எடப்பாடியார்!

*கலாநிதி-கண்ணன் வேண்டுகோள்!-உடனடி உத்தரவிட்ட எடப்பாடியார்!*

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அம்மையார் செல்வி.ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் மணிமண்டபம் அமைத்துக்கொடுத்து பெருமை சேர்த்தார். அவரின் வழியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த எடப்பாடியார் அவர்கள் பாஞ்சை கோட்டையை புனரமைக்க ஆணை பிறப்பித்ததோடு, இசைமாமேதை நல்லப்பசுவாமிகளுக்கு மணிமண்டபமும் அமைத்துக் கொடுத்தார். 


ஆட்சியில் இருந்தபோதெல்லாம் மாவீரனுக்கு சிறப்பு செய்த கழகத்தின் சார்பில், மாவீரன் பிறந்தநாள் மற்றும் நினைவுநாட்களில் தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் மாவீரனை சிறப்பிக்கும் வகையில் நிரந்தரமாக நிலையாணை ஒன்றை பிறப்பித்திடக்கோரி அதிமுக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அகில உலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளருமான கலாநிதி,  விருதுநகர் மேற்கு ஒன்றிய செயலாளரும், விருதுநகர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் துணைத்தலைவருமான கே.கே. கண்ணன் ஆகியோர்,  விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.இராஜேந்திர பாலாஜி அவர்களின் மூலமாக முன்னாள் முதல்வரும், கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடியாரிடம் கோரிக்கை வைத்தனர். 


தலைவர்களின் இக்கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார், கழகத்தின் சார்பில் மாவீரனின் 264-வது பிறந்தநாளான ஜனவரி 3-இல் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும், கழகத்தின் சார்பில் மாவீரன் கட்டபொம்மன் சிலை அமைந்துள்ள மதுரையிலும், நினைவுநாளில் கயத்தாரிலும் தலைமைக்கழக நிர்வாகிகள் மாலையிட்டு மரியாதை செலுத்திட உரிய உத்தரவு பிறப்பித்ததோடு, தானும் அன்றைய தினம் (ஜனவரி'3) சேலத்திலுள்ள தனது இல்லத்தில் மாவீரன் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 


தமிழகத்தை அதிக நாட்கள் ஆட்சி செய்த மாபெரும் இயக்கமாகவும்,  வலிமையான எதிர்க்கட்சியாகவும் உள்ள அதிமுக சார்பில் மாவீரனை சிறப்பிக்க நிலையாணை வெளியிட்டிருப்பது தமிழகத்தில் வாழும் 40 லட்சம் கம்பளத்தாருக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்துள்ளது. 


அதிமுகவின் அறிவிப்பை அடுத்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் மற்றும் கே.டி இராஜேந்திரபாலாஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ள சமுதாய தலைவர்கள், இந்த கோரிக்கையை முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக்கியுள்ள மூத்த தலைவர் கலாநிதி மற்றும் ஒன்றிய செயலாளர் கண்ணன் ஆகியோருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பின்போது சிவகாசி வடக்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்புசாமி, நகரமன்ற உறுப்பினர்  சரவணன், மருலூத்து ஊராட்சி மன்றத்தலைவர் ஈரையா, இனாம்ரெட்டியாபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved