தொட்டியநாயக்கர் செய்திகள்
தொட்டிநாயக்கர்
செய்திகள்
தொட்டியநாயக்கர் செய்திகள்

திங்கள், 1 ஜூன் 2026

10:30 AM

LIVE
• அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...? • அரைநூற்றாண்டுக்குப் பின் மீண்டும் உயிர்ப்பெறும் கட்டபொம்மன் சிலை! • தியாவ் சான்: வரலாற்றின் உளவாளியா? இலக்கியம் உருவாக்கிய Honey Trap கதையா? • இராஜகம்பளத்தாரில் புதிய அரசியல் மைல்கல்: அதிமுக மாவட்ட இணைச்செயலாளரான சித்ரா! • ஆசிரியர் பணியில் இருந்து குரூப் 1 வெற்றி வரை! மாநில அளவில் முதலிடம் பிடித்த வீரமாச்சன்பட்டி அழகர்சாமி! • கதை கேட்கலாம்... கற்றுக்கொள்ளலாம்! #03 – தேநீர் கோப்பை நிரம்பியிருந்தால்...?
விளம்பரங்கள்
கட்டபொம்மன் பேனரை கிழித்த கருப்பு ஆடுகள்! போர்க்கோலம் பூண்ட கம்பளத்தார்!

கட்டபொம்மன் பேனரை கிழித்த கருப்பு ஆடுகள்! போர்க்கோலம் பூண்ட கம்பளத்தார்!

Radheyan 31 Dec 2022 | 02:01 AM
பகிர்:

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்தநாளைக் கொண்டாடிட தமிழகம் முழுவதும் ஏற்பாடுகள் தயாராகிவரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்திநகரில் பிறந்தநாளை முன்னிட்டு பிரமாண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததை சில விசமிகள் அகற்றியதைத் தொடர்ந்து கம்பளத்தார்கள் போர்க்கோலம் பூண்டனர்.

காவல்துறையிலுள்ள சிலரின் ஆதரவோடு நடந்துள்ளதாகக்கூறப்படும் இந்த அராஜகச் செயலைக்கண்டித்து ஆங்காங்கே போராட்டங்களும், சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. விரைந்துவந்த போலீசாரின் சமாதானத்தை ஏற்காமல் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, நேரம் செல்லச் செல்ல கூட்டமும் அதிகரித்துக் கொண்டே சென்றது. இறுதியில் அதே இடத்தில் போலீசாரே கட்டபொம்மன் போஸ்டர்களை ஒட்டுவதாக அறிவித்தைத் தொடர்ந்து கூட்டத்தினர் சமாதனமடைந்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் கட்டபொம்மன் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரை மீண்டும் அதே இடத்தில் ஒட்டினர்.

கம்பளத்தாரின் இந்த போராட்டத்தின் காரணமாக அருப்புக்கோட்டை பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

குறிச்சொற்கள்

செய்தி துணுக்குகள் தமிழ்நாடு Aruppukkottai thottianaicker www.thottianaicker.com
விளம்பரங்கள்

தொடர்புடைய செய்திகள்

மேலும் காண